AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு பட டீசருக்கான டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி

Slum Dog 33 Temple Road | தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு. இந்தப் படத்திற்கான டீசரின் டப்பிங் பணியை விஜய் சேதுபதி முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு பட டீசருக்கான டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 16:59 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்ததன் மூலம் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்தப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் முன்னணி நடிகராக இருந்த போது வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வில்லன் கதப்பாத்திரங்களுக்கு நோ சொல்லாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களையும் ஏற்று நடித்தார். இவரது நடிப்பில் நாயகனாகவோ வில்லனாகவோ எந்த வேடத்தில் நடித்து வந்தாலும் தொடர்ந்து அவரது படங்களை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படம்.

ஸ்லம் டாக் பட டீசருக்கான டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி:

இந்த ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு படத்தினை இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து நடிகர்கள் சம்யுக்தா, தபு, பிரம்மானந்தம் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் டீசர் வருகின்ற 08-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் டீசருக்கான டப்பிங் பணியை நடிகர் விஜய் சேதுபதி முடித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… Director Sasi: நூறு சாமி படம் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்ட கதை – இயக்குநர் சசி பேச்சு!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சிக்மா பட பாடலில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் – என்ன வசனம் பாத்தீங்களா?

Follow Us