AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்.. மும்பை சென்ற லோகேஷ் கனகராஜ்!

AA23 Movie Update: தமிழில் பிரபல இயக்குநராகவும், தற்போது ஹீரோவகவும் அறியப்படுபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் AA23 என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளுக்காக அவர் மும்பை சென்றது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்.. மும்பை சென்ற லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 18:49 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு உச்ச நட்சத்திரங்களை கொண்டு திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது சினிமாவில் ஹீரோவாவும் புதிய அவதாரம் எடுத்துள்ளர். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் டிசி (DC) என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி மற்றும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பணிகளை முடித்த லோகேஷ் கனகராஜ், தற்போது அல்லு அர்ஜூனுடன் (Allu Arjun) இணைந்து பணியாற்றவுள்ள AA23 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளார். இதற்காக மும்பை சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். மும்பை விமான நிலையத்திற்கு லோகேஷ் கனகராஜ் வருகை தந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் சான்றிதழ் அப்டேட் இதோ!

மும்பை விமான நிலையத்திற்கு லோகேஷ் கனகராஜ் வந்தடைந்தது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிசி படத்திற்கு பிறகு கார்த்தியுடன் கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக கூலி படத்தின் ரிலீசின்போது கூறியிருந்தார். ஆனால் இதையடுத்து அவர் உடனே அல்லு அர்ஜுனின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள AA23 படத்தில் இணைந்துவிட்டார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ள நிலையில், எப்போதும்போல அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இயக்குநர் ரத்னகுமாரும் இணைந்து பணியாற்றிவருகிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளானது இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது.

இதையும் படிங்க: கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்

லோகேஷ் கனகராஜும் தற்போது தனது டிசி படத்தின் ஷூட்டிங் பணிகளை முழுமையாக முடித்த நிலையில், AA23 படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் இரு மாதங்களில் நிறைவடையும் என கூறப்படும் நிலையில், இதை முடித்த கையேடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் AA23 படத்தில் அல்லு அர்ஜுன் இணைவார் என கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us