AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!

Lokesh Kanagaraj's DC Movie Official Trailer Out Now | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து உள்ள டிசி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!
டிசிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2026 20:54 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் எந்த நாயகனை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரே நாயகனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் முன்னதாக அவர் இயக்கிய மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் உடன் நடித்து இருப்பார். அது 1 நிமிட காட்சி கூட இல்லை. இப்படி இருக்கும் நிலையில் முழு நீலமாக நாயகனாக நடிக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்:

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் டார்க் த்ரில்லர் பாணியில் உள்ள நிலையில் இந்தப் படமும் அப்படியே உருவாகி இருக்கின்றது. படத்திற்கு டிசி என்று பெயர் வைத்துள்ள நிலையில் முன்னதாக படத்தில் டைட்டில் வீடியோவையே ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் முழுக்க முழுக்க கொடூரமாக கொலை செய்யும் நபராக லோகேஷ் கனகராஜ் நடித்து உள்ளது தெரிகிறது. இந்தப் படம் நிச்சயமாக குழந்தைகள் உடன் பார்க்கும் படமாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… கருப்பு படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் – வைரலாகும் எக்ஸ் பதிவுகள்!

டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஷூட்டிங்கை நிறைவு செய்தது பிரபு தேவா – வடிவேலுவின் பேங் பேங் படக்குழு

Follow Us