AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC Movie: தேவதாஸ் – சந்திராவை சந்திக்க தயாரா? டிசி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

DC Movie Trailer Release: தென்னிந்திய மக்கள் மத்தியில் புகப்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ஹீரோவாக நடித்துவந்த திரைப்படம்தான் டிசி. இப்பாத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில், இன்று 2026 மே 15ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

DC Movie: தேவதாஸ் – சந்திராவை சந்திக்க தயாரா? டிசி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
டிசி திரைப்பட டிரெய்லர் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 May 2026 14:42 PM IST

இயக்குநராக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் புகப்பெற்றவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் முதலமைச்சர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) போன்ற பல்வேறு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் இவர் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் டிசி (DC). இவர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும் கூட, மேலும் தனுஷின் கேப்ட்டன் மில்லர் (Captain Miller) திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் டிசி பட ட்ரெய்லர் இன்று 2026 மே 15ம் தேதியில் மாலை 6 மணியளவில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு பட முதல் காட்சி.. ரசிகர்களுடன் திரையரங்கில் பார்வையிட்ட படக்குழு!

லோகேஷ் கனகராஜின் டிசி பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இந்த டிசி திரைப்படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி திரைப்படமாக தயாராகியுள்ளதாம். இதன் படத்தின் ட்ரெய்லர் 2026ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக படக்குழு ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. இந்த விழாவானது வரும் 2026 மே 12ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் பிரான்சில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த விழாவின்போது டிசி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை முன்னிட்டு, இன்று 2026 மே 15ம் தேதி மாலை 6 மணியளவில் டிசி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரவி மோகன் – ஆர்த்தி ரவியின் விவகாரம்.. வெளிப்படையாக அதிரடி பதில் கொடுத்த பாடகி கெனிஷா!

டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, பாலிவுட் நடிகை வாமிகா கபி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இதில் லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துவருகிறார். இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாத நிலையில், ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us