AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிக்மா பட பாடலில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் – என்ன வசனம் பாத்தீங்களா?

Superstar Rajinikanth punch dialogue in Sigma movie first Single | நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள சிக்மா படத்தின் முதல் பாடல் நேற்று வெளியான நிலையில் அந்தப் பாடலில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்று இருப்பது வைரலாகி வருகின்றது.

சிக்மா பட பாடலில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் – என்ன வசனம் பாத்தீங்களா?
சிக்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2026 17:14 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இனி படங்களில் அவர் நடிக்கப்போவதில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது மகன் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது மகிழ்ச்சி அளித்துள்ளது. அதன்படி தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நாயகனாக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்தினார். அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் ஜேசன் சஞ்சய். தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைப்பெற்று வந்தது.

இந்தப் படத்திற்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஜூலை மாதம் 31-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

சிக்மா பட பாடலில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள்:

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து சிக்மா ஸ்டைல் என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடலில் நடிகர்கள் இயக்குநர் என படக்குழுவினர் அனைவரும் இடம் பெற்று இருந்தனர். இந்தப் பாடலின் வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்.. மும்பை சென்ற லோகேஷ் கனகராஜ்!

Follow Us