AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேதி குறிச்சாச்சு… நூறு சாமி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்

Vijay Antonys Nooru Sami Movie Release Update | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

தேதி குறிச்சாச்சு… நூறு சாமி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்
நூறு சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 15:11 PM IST

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சுக்கிரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி கொடுத்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் விஜய் ஆண்டணி இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இன்றி பாடல்களின் விளக்கம் தேடியே ஒரு கூட்டம் சுற்றித் திரிவது வழக்கமாக இருந்தது. இப்படி இசையில் கொடிக்கட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தது போல படங்களுக்கும் தொடர்ந்து வரவேற்பைப் கொடுத்து வந்தனர். அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி உள்ள நூறு சாமி படம் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

நூறு சாமி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு:

அதன்படி இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த நூறு சாமி படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சுவாசிகா நடித்து உள்ளார். முன்னதாக சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூறு சாமி படத்தின் மூலம் இணைவதால் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது படம் எப்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read… பரிமளா & கோ படத்தை எந்த வயதினர் எல்லாம் பாக்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

நூறு சாமு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Janhvi Kapoor: அதற்காகவே பெத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் – ஜான்வி கபூர்!

Follow Us