AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரிமளா & கோ படத்தை எந்த வயதினர் எல்லாம் பாக்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

Parimala and Co movie censor update | நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பரிமளா & கோ படத்தை எந்த வயதினர் எல்லாம் பாக்கலாம்? சென்சார் அப்டேட் இதோ
பரிமளா & கோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2026 15:47 PM IST

மலையாள சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி. இவர்கள் இருவரும் மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடிப்பது போல தமிழ் சினிமாவிலும் அதிக அளவில் நடித்து இருந்தனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் மட்டும் இன்றி தனித் தனியாக நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர்கள் ஜெயராம் மற்று ஊர்வசி இருவரும் இணைந்து தற்போது நடித்து உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாண்டி மாஸ்டர், யோகி பாபு, மிஸ்கின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ் குமரன், செண்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

பரிமளா அண்ட் கோ படத்திற்கு தணிக்கைகுழு வழங்கியது யு/ஏ சான்றிதழ்:

அதன்படி படம் வருகின்ற 05-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து உள்ள நிலையில் படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

பரிமளா அண்ட் கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kiara Advani: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கின்போது அது சவாலாக இருந்தது – கியாரா அத்வானி!

Follow Us