AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெய்டிங் ஓவர்… தொடங்கியது பரிமளா & கோ படத்தின் டிக்கெட் புக்கிங்!

Parimala and Co Movie Ticket Booking Update Here : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி நடிப்பில் உருவாகி உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதி தற்போது தொடங்கி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெய்டிங் ஓவர்… தொடங்கியது பரிமளா & கோ படத்தின் டிக்கெட் புக்கிங்!
பரிமளா அண்ட் கோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 18:37 PM IST

தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பசங்க என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். குழந்தைகளின் வாழ்க்கை அவர்களின் பார்வையில் இருந்து பார்ப்பது போல இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இயக்குநர் பாண்டிராஜ் மக்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடங்கியது பரிமளா & கோ படத்தின் டிக்கெட் புக்கிங்:

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த பரிமளா அண்ட் கோ படத்தில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 05-ம் தேதி  ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… கிராமத்து பின்னணி கதையில்.. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தனுஷ்?

பரிமளா அண்ட் கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

Follow Us