AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓஜி கூட்டணி இஸ் பேக்… ஜெயராம் – ஊர்வசி நடிப்பில் வைரலாகும் பரிமளா & கோ படத்தின் டைட்டில் டீசர்

Parimala and Co Movie Title Teaser | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பண்டிராஜ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் பரிமளா & கோ. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஓஜி கூட்டணி இஸ் பேக்… ஜெயராம் – ஊர்வசி நடிப்பில் வைரலாகும் பரிமளா & கோ படத்தின் டைட்டில் டீசர்
பரிமளா & கோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 May 2026 12:50 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பசங்க. இந்தப் படத்தை கடந்த 2009-ம் ஆண்டு இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்த இயக்குநர் பாண்டியராஜ் அடுத்தடுத்து காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை இயக்கி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தார். தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என அடுத்தடுத்தப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இறுதியாக இயக்குநர் பாண்டிராஜ் தலைவன் தலைவி என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார்.

நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இணைந்து நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூலில் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்க உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

ஊர்வசி நடிப்பில் வெளியானது பரிமளா & கோ பட டைட்டில் டீசர்:

பிரபல நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓஜி கூட்டணி என்று அழைக்கப்படும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குறார்.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், தமிழ் குமரன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு பரிமளா & கோ என்று பெயர் வைத்துள்ள நிலையில் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

பரிமளா & கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரியோ ராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு வீடியோ இதோ!

Follow Us