AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Sivakarthikeyan About His family Reaction For Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் அமரன் படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், அமரன் படத்தைப் பார்த்து தனது குடும்பத்தின் ரியாக்ஷன் குறித்து பேசியுள்ளார்.

Sivakarthikeyan: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
சிவகார்த்திகேயன் குடும்பம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2026 17:05 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இப்படமானது முற்றிலும் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீட்டிற்கு முன் பெரிதும் பேசப்பட்டிருந்தது. ஆனால் வெளியான பிறகும் எதிர்பார்த்த வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக, தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்கத்தில், சேயோன் (Seyon) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், சிவகார்த்திகேயன் தனது சொந்த வேலைகளில் பிசியாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் (Rajkumar Periasamy( நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியின்போது, தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம், அமரன் (Amaran) படத்தை பார்த்தபிறகு உங்களின் குடும்பத்தின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: கர படத்திற்கு தனுஷ் கொடுத்த ஹைப் ஒர்க் ஆனதா? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ

அமரன் படத்தை பார்த்தபிறகு தனது குடும்பத்தின் ரியாக்ஷன் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசியிருந்த சிவகார்த்திகேயன், “அமரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை எனது மனைவி (ஆர்த்தி சிவகார்த்திகேயன்) பார்க்கவே இல்லை. அதை பார்க்கும் அளவிற்கு அவருக்கு சக்தியில்லை. ஆனால இந்த படத்தை முழுவதுமாக எனது அம்மா பார்த்துவிட்டு, என்னை எமோஷனலாக கட்டிப்பிடித்து அழுதார். ஏனென்றால், அதுபோல உண்மையான சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்திருக்கு.

இதையும் படிங்க: ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

எனது அப்பாவும் போலீஸ் பணியின்போதுதான் இறந்தார். அதனால் எல்லாருமே எமோஷ்னலா இருந்தார்கள். மேலும் எனது மக்களும் அழுதபடியே, இனிமேல் இதுபோன்ற படத்தில் நடிக்கவேண்டாம் என சொன்னார். உடனே நான் அவரிடம், உயிர் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்க நான் நடித்தே ஆக வேண்டும் என் சொன்னேன் என அதில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ:

சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங்கானது வரும் 2026 மே 15ம் தேதிக்கு பிறகு நடைபெறவுள்ளதாம். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் காந்தா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us