AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyanka Mohan: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி.. அவரை பாராட்ட விரும்புகிறேன் – பிரியங்கா மோகன் பேச்சு!

Priyanka Mohan praises Sivakarthikeyan: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மற்றும் அவரின் வளர்ச்சி படிகள் குறித்தும் பாராட்டி பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Priyanka Mohan: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி.. அவரை பாராட்ட விரும்புகிறேன் – பிரியங்கா மோகன் பேச்சு!
பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Apr 2026 20:47 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் பிரியங்கா மோகன் (Priyanka Moha). இவரின் நடிப்பில் இறுதியாக மேட் இன் கொரியா (Made In Korea) என்ற படமானது வெளியாகியிருந்தது. நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் செண்பகம் என்ற பெண் லீட் வேடத்தில் நடித்து பிரியங்கா மோகன் ஹிட் கொடுத்திருந்தார். இப்படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் டாப் 10 ட்ரெண்டிங் படங்களில் ஒன்றாக இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தற்போது கவினின் (Kavin) 9வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கியிருந்த கென் ராய்சன் என்பவர் இயக்கிவருகிறார். இப்படத்தில் கவின் மற்றும் பிரியங்கா மோகனுடன், டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகன் தமிழில் முதல் முதலாக சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்தே பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து பேசிய பிரியங்கா மோகன்:

அந்த நேர்காணலில் பிரியங்கா மோகன் பேசுகையில், “சிவகார்த்திகேயன் சிறப்பான வளர்ச்சி பாதையை கொண்டவர். அவரை நான் பாராட்ட விரும்புகிறேன். அவரின் சினிமா வாழ்க்கைகளை அவர் செய்த விஷயங்களுக்காகவும், அவரை நான் வெகுவாக பார்த்த விரும்புகிறேன். அவர் அவரின் சினிமா பாதையை தெளிவாக கொண்டு செல்கிறார்” என அதில் அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் படத்திற்கு சென்சார்? அப்போ ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியானது இரு படங்களில் இணைந்து நடித்துள்ளது. பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமான முதல் படம் டாக்டர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் அல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் டான் படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் பெரிய பெரிய படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் இந்த ஜோடியானது இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடிக்கவுள்ள நிலையில், அதில் தெலுங்கு நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Follow Us