Priyanka Mohan: கொரியா-ல பாண்டிய இளவரசி செம்பவளம் சமாதி இருக்கு… நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்!
Priyanka Mohan About Pandiyan Princess Sembavalam: நடிகை பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் மேட் இன் கொரியா. இது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா மோகன், பாண்டிய இளவரசி செம்பவளம் குறித்தும் மற்றும் அவரின் சமாதி குறித்தும் பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழ் மொழியை மையமாக கொண்டு வித்தியாசமான ஸ்டோரியில் தயாராகியுள்ள படம்தான் “மேட் இன் கொரியா” (Made In Korea). இதை இயக்குநர் ரா. கார்த்திக் (Raa. Karthik) இயக்கியுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் (Netflix OTT) தயாரித்துள்ளது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரியங்கா மோகனுடன், கொரியா நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படமானது வரும் 2026 மார்ச் 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பிரியங்கா மோகன் கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் பாண்டிய இளவரசி செம்பவளம் (Pandiyan Princess Sembavalam) சமாதி பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: திருமண நாள் சர்ப்ரைஸ்.. தனது மனைவிக்கு ரூ 15 கோடி மதிப்பு மிக்க பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்!
பாண்டிய இளவரசி செம்பவளம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேசிய விஷயம்:
நேர்காணலில் பிரியங்கா மோகன் பேசுகையில், “சோழர்கள், பாண்டியர்கள் காலகட்டத்தில் பாண்டிய இளவரசி செம்பவளம் என்பவர், கடல் கடந்து கொரியா சென்று, கொரியா இளவரசர் சுரோ என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்போது அவர் நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், பல விஷயங்ககளை அங்கு கொண்டு சென்றுள்ளார். இப்போதும் கொரியா மக்கள் அந்த இளவரசியை ஒரு தெய்வமாக கும்பிடுகிறார்கள்.
இதையும் படிங்க: டியூட் பார் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை
கொரியாவில் அவரின் சமாதி இருக்கிறது. நாங்கள் மேட் இன் கொரியா பட ஷூட்டிங்கின்போதும் அவரின் சமாதி பக்கத்தில் ஷூட் பண்ணிருக்கோம். அந்த சமாதியில் எழுதியிருந்தது, இது இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்துவந்த இளவரசி என்றும், அவரை பற்றியும் பல விஷயங்கள் எழுதியிருந்தது. அவர் எங்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தினார், மக்கள் அவரை எவ்வாறு ஏற்றுக்கொண்டனர் என்பது பற்றி பல விஷயங்கள் அங்கு எழுதப்பட்டிருந்தது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேட் இன் கொரியா பட ஷூட்டிங் குறித்து பிரியங்கா மோகன் பேசிய வீடியோ பதிவு:
#PriyankaMohan Recent
– Pandyan kingdom Princess Sembavalam traveled across the seas.
– She went to Korea and married the Korean king, Suro. At that time, she carried some things from our culture. Even now, people pray to her.pic.twitter.com/bZPXJGbb3u— Movie Tamil (@_MovieTamil) March 8, 2026
இந்த மேட் இன் கொரியா திரைப்படமானது கொரியா நாட்டிற்கு செல்ல துடிக்கும் ஒரு தமிழ் பெண்ணை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இது முற்றிலும் காமெடி, எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026 மார்ச் 12ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.