Allu Arjun: திருமண நாள் சர்ப்ரைஸ்.. தனது மனைவிக்கு ரூ 15 கோடி மதிப்பு மிக்க பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்!
Allu Arjun Gifted Wife Sneha Reddy: தெலுங்கு சினிமாவில் உச்ச நச்சத்திர நாயகனாக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியிருந்தார். திருமண நாள் ஸ்பெஷலாக தனது மனைவிக்கு அல்லு அர்ஜுன் சிறப்பான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் லிஸ்டில் முதன்மையானவராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவர் இறுதியாக புஷ்பா பார்ட் 2 (Pushpa 2) படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது தமிழ் இயக்குநரான அட்லீ (Atlee) இயக்கத்தில் AA22 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட 4 வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அல்லு அர்ஜுனின் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறது. படப்பிடிப்புகளை தொடர்ந்து தனது குடும்பத்தினருடனும் அல்லு அர்ஜுன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் அவரின் மனைவி சினேகா ரெட்டி (Sneha Reddy) இருவருமே தங்களின் 15வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.
இந்நிலையில் அந்த சிறப்பான நாளில் நடிகர் அல்லு அர்ஜுன், தனது மனைவிக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அது என்னவென்றால் தனது மனைவி சினேகா ரெட்டிக்கு அல்லு அர்ஜுன், கிட்டத்தட்ட ரூ 15 கோடி மதிப்பு மிக்க ஸ்பெஷல் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.




இதையும் படிங்க: கெணத்த காணோம் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட ரவி மோகன்
சினேகா ரெட்டிக்கு அல்லு அர்ஜுன் கொடுத்த பரிசு தொடர்பான வீடியோ பதிவு:
Icon star Allu Arjun gifted a Mercedes Benz car to his wife Sneha Reddy on their 15th Wedding Anniversary!#AlluArjun #AlluSnehaReddy #SnehaReddy pic.twitter.com/mHMHBNFK3A
— The News Diary (@The_NewsDiary) March 7, 2026
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு மற்றும் தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 21 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், அதில் இறுதியாக வெளியான புஷ்பா 2 கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. குறைவான படத்தில் நடித்தாலும், அனைத்தும் ஹிட் படங்களாகவே இவருக்கு அமைந்திருந்தது. இவர் கடந்த 2011ம் ஆண்டில் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்திருந்தார். காதல் ஜோடியாக இவர்களுக்கு சினிமாவிலும் பிரபலம் உண்டு. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இதையும் படிங்க: டியூட் பார் 2 எப்போ வரும்? இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கலகல ரிப்ளை
தங்களின் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்திருந்தாலும், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சிறந்த ஜோடியாக இருந்துவருகிறார்கள். இந்நிலையில் ஸ்கடந்த 2026 மார்ச் 6ம் தேதியில் இந்த ஜோடி தங்களின் 15வது திருமண நாளை கொண்டாடியிருந்தனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனது காதல் மனைவிக்கு நடிகர் அல்லு அர்ஜுன், ரூ 15கோடி மதிப்பிலான கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.