Jana Nayagan: தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் படத்திற்கு சென்சார்? அப்போ ரிலீஸ் எப்போது தெரியுமா?
Jana Nayagan Movie Update: தளபதி விஜய்யின் நடிப்பில் 69வது திரைப்படமாக தயாராகியிருந்ததுதான் ஜன நாயகன் திரைப்படம். இந்த படமானது இணையத்தில் லீக்கான நிலையிலும், திரையரங்குகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு எப்போது சென்சார் மற்றும் ரிலீஸ் எப்போது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் காத்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதில் தளபதி விஜய் (Thalapathy Vijay) லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க அரசியல் மற்றும் பெண் குழந்தைகளின் படகுக்காப்பு போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேல் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்திருந்தது. இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது வெளியாகாத என ரசிகர்கள் பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்னும் இப்படத்திற்கு சென்சார் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு எப்போது சென்சார் கிடைக்கும், திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
ஜன நாயகன் பட சென்சார் மற்றும் ரிலீஸ் தேடி விவரங்கள் :
விஜய்யின் ஜன நாயகன் படமானது கிட்டத்தட்ட ரூ 500 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகியிருந்தது. இதில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக தொடர் ஒத்திவைப்பை சந்தித்தது. இப்படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்த நிலையில், கசியவிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கருப்பு பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப ஆச்சயரமாக இருந்தது – சாய் அபயங்கர் பேச்சு!
அந்த வகையில் இந்த படத்திற்கு வரும் 2026 ஏப்ரல் 24ம் தேதியில் சென்சார் கிடைத்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் , திரையரங்கு விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் பட சென்சார் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
As Per VP,
– The CBFC is set to issue the #JanaNayagan censor certificate by April 24.
– The KVN team has informed the Tamil Nadu distributors, We are coming to Chennai to discuss the release date.
– The team is planning to release the movie on April 30.#ThalapathyVijay pic.twitter.com/tvCfKLkwcF
— Movie Tamil (@_MovieTamil) April 21, 2026
இந்த படமானது திரையரங்குகளில் வெளியானால் அதிக வசூலை பெறுமா? என்பது கேள்விக்குறிதான். ஆனால் இந்த படத்திற்கு நிச்சயம் தளபதி விஜய்யின் ரசிகர்க்கின் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது.அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட ரூ 100 முதல் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.