பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!
Ajith Car Racing: சினிமாவில் நாயகனாக மட்டுமில்லாமல், கார் ரேஸில் ஹீரோவாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் தனது கார் ரேஸ் அணியினருடன் பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் பெல்ஜியமில் நடத்த 24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம் போட்டியில், 2வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளது. இதை ரசிகர்களை கொண்டாடி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகனாக நடித்து அசத்திவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் கார் ரேஸராகவும் (Car Race), பல போட்டிகளில் கலந்துகொண்டுவருகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு இறுதியிலிருந்து இந்தியா மற்றும் இந்திய சினிமா துறையில் சார்பாக பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றுவருகிறார். கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் பங்குபெற்றுவருகிறார். அந்த வகையில் இத்தாலி, துபாய், மலேசியா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளில் நடந்த 24H கார் ரேஸ் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொண்டு வந்தார். அந்த வகையில் இவரும் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல இந்தத் படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகவில்லை.
அந்த வகையில் அண்மையில் நடந்த பெல்ஜியம் 24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம் போட்டியில் அஜித்குமார், தனது அணியினருடன் கலந்துகொண்டார். அந்த கார் ரேஸில் அஜித் குமாரின் அணியானது 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் நடிகர் அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்தியும், கோப்பையை ஏந்தியும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.




இதையும் படிங்க: சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl @DoneChannel1 #AjithKumar #IndianRacing… pic.twitter.com/BcZ3cl1U27
— Suresh Chandra (@SureshChandraa) April 19, 2026
நடிகர் அஜித் குமார் சினிமாவில் தனது ரசிகர்களுக்காக நடித்தது போலவே, கார் ரேஸில் தனக்காக கலந்துகொண்டுவருகிறார். அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னே, ரேஸின்மீது ஆர்வமாக இருந்தவர். அந்த வகையில் அவ்வப்போது பைக்கில் ரேஸ் செய்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார். இந்நிலையில் மேலும் 2024ம் ஆண்டு இறுதியில், முழுவதுமாக கார் ரேஸில் இறங்கிவிட்டார். அந்த வகையில் சினிமாவில் நடிப்பதை கடந்து, கார் ரேஸில் தீவிரமாக இருந்துவந்தார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லை… வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா? வைரலாகும் தகவல்
மேலும் அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதியாகாத நிலையில், படத்தின் அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தை அஜித்தின் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் ரேஸை ஆவணப்படமாக இயக்குநர் பா.விஜய் இயக்கியுள்ளார். இப்படமானது 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் AK64 படமானது 2027ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.