AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Manu Anand: அஜித் சார் எப்போது அழைத்தாலும் படத்திற்கு தயார்.. இயக்குநர் மனு ஆனந்த் பகிர்ந்த விஷயம்!

Manu Anand on Ajith Kumar Collaboration: தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர்தான் மனு ஆனந்த். இவர் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், அஜித் குமாருடன் படத்தில் இணைவது குறித்து பேசியுள்ளார்.

Manu Anand: அஜித் சார் எப்போது அழைத்தாலும் படத்திற்கு தயார்..  இயக்குநர் மனு ஆனந்த் பகிர்ந்த விஷயம்!
மனு ஆனந்த் மற்றும் அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Apr 2026 15:00 PM IST

கடந்த 2022ம் ஆண்டில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த படம்தான் எப்ஐஆர் (FIR). இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நாயகனாக நடிக்க, இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கியிருந்தார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே இதுதான். இவர் இயக்குநராக பணியாற்றுவதற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனனிடம் (Gautham Vasudev Menon) உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் எப்ஐஆர் படத்தை இயக்கியிருந்தார். விறுவிறுப்பான கதைக்களத்தில் வெளியான இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் 2வது இயக்கியுள்ள படம்தான் மிஸ்டர் எக்ஸ் (Mr. X). இதில் ஆர்யா (Arya), மஞ்சு வாரியர் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது 2026 ஏப்ரல் 17ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் மனு ஆனந்த் அஜித் குமாருடன் (Ajith Kumar) படத்தில் இணைவதாக கூறப்பட்டுவந்த நிலையில், அது குறித்து அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: LIK படம் 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

அஜித் குமாருடன் படத்தில் இணைவது பற்றி இயக்குநர் மனு ஆனந்த் சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் மனு ஆனந்த் பேசுகையில், “நானும், அஜித் குமார் சாரும் படத்தில் ஒன்றாக பணியாற்றுவது குறித்து பேசியிருக்கிறோம். இதுவரை இப்படம் குறித்து எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தலை என்னால் முடிந்த சிறப்பை வெளிப்படுத்துவேன். அவர் தற்போது ரேஸிங் மற்றும் AK64 படத்தின் மீது கவனம் செலுத்திவருகிறார் அதிலும் AK64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். மேலும் அவர் எப்போது அழைத்தாலும் எனது படத்திற்காக நான் தயார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் இயக்குநர்கள் பாலா மற்றும் பா. ரஞ்சித்தை முழுமையாக நம்புவேன் – நடிகர் ஆர்யா

மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் குறித்து இயக்குநர் மனு ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் மனு ஆனந்தின் இயக்கத்தில் முற்றிலும் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் மிஸ்டர் எக்ஸ். இந்த படமானது 2026 ஏப்ரல் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us