AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹாலிவுட் ஸ்டைலில் உள்ள படம்.. கர திரைப்பட கதை குறித்து தெரிவித்த விக்னேஷ் ராஜா!

Director Vignesh Raja About Kara Movie: நடிகர் தனுஷ் மற்றும் மமிதா பைஜூவின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கர. இந்த படமானது வித்தியாசமான திரைப்படமாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா அப்டேட் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் ஸ்டைலில் உள்ள படம்.. கர திரைப்பட கதை குறித்து தெரிவித்த விக்னேஷ் ராஜா!
கர திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Apr 2026 08:21 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர், இயக்குநர் என சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக இந்தி மொழியில் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற படமானது வெளியானது. இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தமிழில் இவர் ஒப்பந்தமான புது படம்தான் கர (Kara). இந்த படமானது ஆரம்பத்தில் தனுஷின் டி54 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை போர் தொழில் (Por Thozhil) பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (vignesh raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. அந்த வகையில் இப்படமானது தற்போது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது . இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர படத்தில் மமிதாவை நடிக்கவைத்தது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா!

தனுஷின் கர திரைப்படத்தின் கதைக்களம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், “கர பாத்தின் கதை ஒரு கிராமத்தில் நடக்கும், ஹாலிவுட் பாணியிலான திரைப்படம். இப்படத்தில் சஸ்பென்ஸ், விறுவிறுப்பு தருணங்கள் அதிகமாக இருக்கும். இதில் தனுஷ் சார் காட்சியையும், தனது நடிப்பின் மூலம் புது தளத்திற்கு எடுத்து செல்கிறார். திடீரென நம்மை ஒரு சிறந்த எழுத்தாளராக உணர வைக்கிறார். இப்படம் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்ட படம். மேலும் எனக்கு திரில்லர் படத்தை இயக்குவதில் நம்பிக்கை உள்ளது.

இதையும் படிங்க: சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

கர படம் ஒரு வழக்கமான கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் அல்ல. அதன் காரணமாக இப்படத்தை ப்ரோமோஷன் செய்வதில் சில கஷ்டம் உள்ளது. கதையை பற்றி என்னால் அதிகமாக பேசமுடியாது. மேலும் இப்படத்தில் பாடல்களும் குறைவாகவுள்ளது. ஆனால் கதையின் மூலம் மிகவும் ஈர்க்கக்கூடிய படம்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கர திரைப்படம் குறித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள கர படமானது, வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, 2026 ஏப்ரல் 19ம் தேதியில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us