நான் இயக்குநர்கள் பாலா மற்றும் பா. ரஞ்சித்தை முழுமையாக நம்புவேன் – நடிகர் ஆர்யா
Actor Arya talks about directors Bala and Pa Ranjith: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஆர்யா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தான் மிகவும் நம்பும் இயக்குநர்கள் என்று பாலா மற்றும் பா ரஞ்சித்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன போது நாயகனாக அறிமுகம் ஆகவில்லை. இரண்டாம் நாயகனாகவே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு மிகவும் ஜாலியான இளைஞர்களை கவரும் படங்களிலேயே அதிக அளவில் நடித்து வந்தார் நடிகர் ஆர்யா. தொடர்ந்து அப்படி நடித்து வந்த ஆர்யா இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் மற்றும் நான் கடவுள் ஆகியப் படங்களில் நடித்த பிறகு அவரின் நடிப்பில் வெளியாகும் படங்களில் மாற்றம் வந்தது என்றே சொல்லலாம்.
தொடர்ந்து ஜாலியான படங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்யா பிறகு கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தப் படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆர்யாவின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




நான் இயக்குநர்கள் பாலா மற்றும் பா. ரஞ்சித்தை முழுமையாக நம்புவேன்:
இந்த நிலையில் நடிகர் ஆர்யா சமீபத்தில் அளித்தப் பேட்டியில் இயக்குநர்கள் பாலா மற்றும் பா ரஞ்சித் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறியதாவது, பாலா சார் மற்றும் பா. ரஞ்சித் சார் போன்ற இயக்குநர்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. ‘வேட்டுவம்’ படத்திற்காக, ரஞ்சித் சார் என்னை அழைத்து, தன்னிடம் ஒரு கதை இருப்பதாகக் கூறினார். அது என்ன கதை என்று நான் கேட்டேன்; அதற்கு அவர், “நான் கதையைச் சொன்னால், நீங்கள் நடிக்க மாட்டீர்கள். அதனால், சும்மா நடித்துவிடுங்கள், என்று பதிலளித்தார். அத்துடன், அந்தக் கதை விவாதம் அங்கேயே முடிந்துவிட்டது.
பாலா சார் என்னை அழைத்து, ஒரு கழுதையாக நடிக்குமாறு கேட்டால் கூட, நான் சற்றும் தயங்காமல் அதைச் செய்வேன். ஆனால், ஒரு புதுமுக இயக்குநராக இருந்தால், கதையைக் கேட்டு, அதன்பின் முடிவெடுக்கும் சுதந்திரம் நமக்கு உண்டு. ஒருமுறை நான் பாலா சாரிடம் ஒரு வாய்ப்பு கேட்டேன்… அவர் என்னை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, ஒரு ‘அகோரி’ தோற்றத்தை (pose) எனக்குக் காட்டி, அதை ஒரு மாதத்திற்குள் கற்றுக்கொள்ளுமாறு கூறினார். பின்னர் அவர், “நீதான் இந்தப் படத்தின் கதாநாயகன்,” என்று சொன்னார்.
Also Read… RJ Balaji: ஒரு மாஸ் ஹீரோவின் கதை.. கருப்பு படம் இப்படிதான் இருக்கும் – ஆ.ஜே.பாலாஜி!
இணையத்தில் வைரலாகும் நடிகர் ஆர்யாவின் பேச்சு:
#Arya in a Recent Interview ⭐:
• I completely trust directors like Bala sir and Pa. Ranjith sir. For #Vettuvam, Ranjith sir called me and said he had a story. I asked what it was, but he replied, “If I tell you the story, you won’t do it… so just do it.” And the script… pic.twitter.com/e6IPG4W8JJ
— Laxmi Kanth (@iammoviebuff007) April 16, 2026