AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

Annan Seer Scheme Tender : திருமணமாகும் பெண்களுக்கான அண்ணன் சீர் திட்டத்திற்கு தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவைகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் சீர் திட்டம்:  8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Nov 2026 10:02 AM IST

சென்னை, நவம்பர் 4 : ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் மணப்பெண்களுக்கு வழங்கப்பட உள்ள 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசு (TN Government) ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் அண்ணன் சீர் திட்டம்

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் கலாச்சாரத்தில் திருமணத்தின்போது அன்பு, பாசம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடையாளமாக ஒரு அண்ணன் தன் சகோதரிக்கு வழங்கும் சீர் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அதே உணர்வுடன், மணப்பெண்களுக்கு அண்ணனின் இடத்தில் இருந்து அரசு துணை நிற்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருமணமாகவுள்ள மணப்பெண்களுக்கு, அரசின் சார்பில் பரிசாக 22 காரட் கொண்ட 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்படும்.

இதையும் படிக்க : திடீர் பிரசவ வலி.. ஆம்புலன்ஸில் குழந்தை பெற்ற பெண்.. சிவகங்கையில் சுவாரஸ்யம்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு, 2026 ஆகஸ்ட் 5 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026–27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலர் பல்லவி பல்தேவ் இதற்கான அரசாணையை வெளியிட்டார். இதன்படி, இந்தத் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு தகுதி?

  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்
  • தமிழகத்தைச் சேர்ந்த மணப்பெண்ணாக இருக்க வேண்டும்.
  • திருமணம் தமிழகத்திலேயே நடைபெற வேண்டும்.
  • அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

திட்டத்துக்கான விரிவான தகுதி நிபந்தனைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் தனியாக வெளியிடப்படும் என்றும் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

தங்கம் விலை

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படி, திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயங்களும் பட்டுப்புடவைகளும் கொள்முதல் செய்யப்படும். தங்க நாணயத்துக்கான கொள்முதல் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலையில், இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

Follow Us