Gold Price : தங்கம் விலை 2வது நாளாக உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Gold and Silver Price In Chennai Today | தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 04 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 04, 2026) இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தங்கத்துக்கான சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. அதாவது, ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 22 காரட் தங்கம் அதனை தொடர்ந்து மிக கடுமையான விலை சரிவை சந்தித்து வந்தது. அதன் விளைவாக தற்போது ஒரு கிராம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Gold Price: சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
தங்கத்தின் ஏற்ற, இறக்கத்துக்கு என்ன காரணம்?
2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக புவிசார் பதற்றம் நிலவியது. அதனால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்ய தொடங்கினர். அதாவது, பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பிறகு நிலமை தலைகீழாக மாறியது. அதாவது கச்ச எண்ணெய் விலை உயர்வு, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆகியவை தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி கடும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க : அக்டோபரில் 5 லட்சம் கார்கள் விற்பனை.. முதல் 3 இடங்கள் எந்த நிறுவனம் தெரியுமா?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,825-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,991-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,928-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சரிவை சந்திக்கும்
தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே கடும் சரிவில் உள்ள நிலையில், உலக மத்திய வங்கிகள் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தும் பட்சத்தில் இவை இரண்டும் மேலும் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.