AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள்.. தமிழக அரசின் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம் – எங்கு வாங்கலாம்?

Vetri Special Vegetable Pack Scheme : தீபாவளியை முன்னிட்டு குறைந்த செலவில் ரூ.100க்கு 10 காய்கறிகள் கொண்ட வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு நவம்பர் 4, 2026 நாளை தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டம் வருகிற நவம்பர் 5, 2026 நாளை முதல் நவம்பர் 7, 2026 வரை விற்பனை செய்யப்படவிருக்கிறது.

ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள்.. தமிழக அரசின் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம் –  எங்கு வாங்கலாம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Nov 2026 11:01 AM IST

சென்னை, நவம்பர் 4 : தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு (Vetri Special Vegetable Pack Scheme) என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  இந்த திட்டம் வருகிற நவம்பர் 5, 2026 அன்கு த தொடங்கி நவம்பர் 7, 2026  வரை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசின் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்

தீபாவளி வருகிற நவம்பர் 8, 2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு என்ற திட்டத்தை தமிழக அரசு நவம்பர் 5, 2026 நாளை தொடங்கப்படவுள்ளது.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்களின் செலவுகள் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக இந்த ஆண்டு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து சமையலுக்குத் தேவையான காய்கறிகளை மலிவு விலையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிக்க : முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளி இலவச வேட்டி, சேலை – ரேஷன் கடைகளில் நவ. 7 வரை விநியோகம்

இது குறித்து வெளியான அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைவான விலையில் காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி, வருகிற நவம்பர் 5, 2026 நாளை முதல் நவம்பர் 7, 2026 சனிக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் கீழ் செயல்படும் 218 விற்பனை நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று ரூ.100 செலுத்தி காய்கறித் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள்

மேலும், சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் இந்தத் தொகுப்புகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியாத சில பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் காய்கறித் தொகுப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.100 தொகுப்பில் என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?

1. பெரிய வெங்காயம் – 500 கிராம்
2. தக்காளி – 500 கிராம்
3. கத்தரிக்காய் – 250 கிராம்
4. உருளைக்கிழங்கு – 250 கிராம்
5. கேரட் – 200 கிராம்
6. பீன்ஸ் – 200 கிராம்
7. பச்சை மிளகாய் – 100 கிராம்
8. எலுமிச்சை – 100 கிராம்
9. இஞ்சி – 50 கிராம்
10. தேங்காய் – 400 முதல் 450 கிராம்

இதையும் படிக்க : திடீர் பிரசவ வலி.. ஆம்புலன்ஸில் குழந்தை பெற்ற பெண்.. சிவகங்கையில் சுவாரஸ்யம்!

இந்த நிலையில் ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் ஒரு தொகுப்பின் விலை ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ தொகை வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள.

Follow Us