AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

TASMAC Announces Diwali 2026 Bonus : தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான நிதி நவம்பர் 4, 2026 இன்று மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Nov 2026 08:46 AM IST

சென்னை, நவம்பர் 4 : தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் (TASMAC) பணியாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான நிதி நவம்பர் 4, 2026 இன்று மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஓராண்டுக் காலத்துக்கான போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 8.33 சதவிகித போனஸும், 11.67 சதவிகிதம் கருணைத் தொகையும் அடங்கும். இந்த போனஸை கணக்கிடுவதற்கான மாத அடிப்படை ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,000 போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இரா.முருகன் மரணம் – கமல்ஹாசன் இரங்கல்

போனஸ் வழங்குவதற்கான நிதி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம், ஒவ்வொரு மாவட்ட மேலாளரின் வங்கி கணக்குக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் நிதி கிடைத்தவுடன், தாமதமின்றிப் பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக போனஸ் தொகையைச் செலுத்தி, அதற்கான ரசீதுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியில் உபரி இருந்தால், அதை பிற செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உண்மையான கணக்கீட்டின்படி தேவைப்படும் தொகை ஒதுக்கப்பட்ட நிதியைவிட அதிகமாக இருந்தால், பற்றாக்குறைத் தொகையை மாவட்ட மேலாளரின் செயல்பாட்டுக் கணக்கு அல்லது கிடங்குக் கணக்கிலிருந்து ஈடுசெய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கும் 20 சதவிகித போனஸ்

வருகிற நவம்பர் 8, 2026 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’, ‘டி’ பிரிவுத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகையை முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்தார். கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கும் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம்

இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக 20 மதுபான வகைகளை டாஸ்மாக் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 4 புதிய பீர் ரகங்களும்
இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பிர்ரா, ஹெய்னகென் சில்வர், சிம்பா ரோர், லோன் உல்ப் ஆகிய 4 புதிய பீர் வகைகளை சில தினங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய் – காவலர்களிடம் கேள்வி

இவை கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த புதிய பீர் வகைகளின் விலை குறைந்தபட்சம் ரூ.250ஆக நிர்ணயிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மது வகைகள் முதற்கட்டமாக எலைட் மதுபானக் கடைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பீர் வகைகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us