பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா? வைரலாகும் புரோமோ வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து 58 நாட்கள் முடிவடைந்து தற்போது 59-வது நாளை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து 7 சீசன்களாக அவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் அடுத்ததாக 8-வது சீசனில் இருந்து தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் மாறி இருந்தாலும் நிகழ்ச்சியில் பேட்டன் ஒரே மாதிரியாக இருந்தது. டாஸ்குகளும் ஒரே மாதிரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கான டாஸ்க் அறிவிக்கப்படும் போதே போட்டியாளர்கலுக்கும் பார்வையாளர்களுக்கும் அது எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்துவிடும். இப்படி இருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்ததில் இருந்து ஒவ்வொரு டாஸ்குகளும் புதுசு புதுசாக வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 9-வது வாரத்தை எட்டியுள்ளது.
பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா?
இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிபி திருந்துங்கடா அகடமி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவருக்கும் பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க் வழங்கி உள்ளார். அந்த டாஸ்கில் பிக்பாஸ் சொல்லும் அனைத்து விசயங்களையும் சீக்ரெட்டாக செய்து முடித்தால் அவர்களுக்கு வார இறுதியில் பாராட்டு கிடைக்க உள்ளது. மேலும் இந்த டாஸ்கில் முதலாவதாக அவர்கள் இருவரும் இணைந்து கொலை செய்வது அக்ஷிதா என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தெலுங்கு சினிமாவில் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்… நடிகர் நானி ஓபன் டாக்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day59 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/5lhYcskWmS
— Vijay Television (@vijaytelevision) November 4, 2026
Also Read… இது அல்லவா சர்ப்ரைஸ்.. SK27 பட இயக்குநருக்கு ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் பரிசளித்த சிவகார்த்திகேயன்!



