AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om Movie: தனுஷின் ஓம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்.. எப்போது எங்கு நடைபெறும்? வெளியான அறிவிப்பு!

Om Movie Audio Launch: அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நடித்துவந்த திரைப்படம்தான் ஓம். இந்த படமானது வரும் 2026 நவம்பர் இறுதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது, எங்கு நடைபெறுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Om Movie: தனுஷின் ஓம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்.. எப்போது எங்கு நடைபெறும்? வெளியான அறிவிப்பு!
ஓம் அத்தியாயம் 1 ஆடியோ லான்ச்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Nov 2026 17:32 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் போற்றப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Actor Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இவர் சினிமாவில் வேறு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு விஷயங்களையும் செய்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). கடந்த 2026 தொடக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் நடிப்பிலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Director Rajkumar Periasamy) இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஓம் சாப்டர் 1 (Om Chapter 1).

இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் மம்முட்டி (Mammoootty), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது மற்றும் எங்கு நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நான் எதற்கும் தயார்.. சக போட்டியாளர்களால் கடுப்பாக பேசிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

தனுஷின் ஓம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு, எப்போது நடைபெறுகிறது:

தனுஷின் இந்த ஓம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாம். இதுவரை இப்படத்திலிருந்து மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மம்முட்டி முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், நடிகை சாய் பல்லவியும் அதிரடி ஆக்ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா… 21 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் சிவகாசி படம்!

அந்த விதத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவானது வரும் 2026 ஆண்டு நவம்பர் 6ம் தேதியில், சென்னையில் உள்ள சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓம் படக்குழு பகிர்ந்துள்ளது.

ஓம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து படக்குழு பகிர்ந்த எக்ஸ் பதிவு:

தனுஷின் ஓம் திரைப்படத்தின் கதைக்களமானது முற்றிலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படமானது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மர கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் அமைக்கப்பட்டள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மம்முட்டி இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us