AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தோல்வியிலும் வெற்றி கண்டது திமுக.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.. சேகர் பாபு கடும் தாக்கு!

Sekar Babu Latest Speech : திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியிலும் வெற்றி கண்ட இயக்கம் என்றும், தமிழக வெற்றிக் கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக விமர்சித்தார் .

தோல்வியிலும் வெற்றி கண்டது திமுக.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.. சேகர் பாபு கடும் தாக்கு!
தவெக தலைவர் விஜய் - அமைச்சர் சேகர் பாபுImage Source: PTI
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 01 Nov 2026 18:09 PM IST

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர் பாபு எம். எல். ஏ. தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து தர குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சேகர்பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜராகினார். இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த பி. கே. சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குகளை கண்டு அஞ்சும் இயக்கம் கிடையாது. தோல்வியிலும் வெற்றி பெற்றது திராவிட முன்னேற்ற கழகம்.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக

வெற்றியிலும் தோல்வி கண்டது தமிழக வெற்றி கழகம். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் தான் தமிழக வெற்றி கழகத்தினர். முதல் அமைச்சரை அந்த அளவுக்கு இயக்கியதே எங்கள் தலைவர் மு. க. ஸ்டாலின்தான். 5 நிமிடம் பேசினாலே அதுவாகிவிடும்… இதுவாகிவிடும் என்று பேசிய முதல்வர் விஜய் தற்போது இடைத்தேர்தல் வெற்றிக்காக சுற்றி சுற்றி வருகிறார் என்று தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் சிறிது நேரம் பேசியதற்கே மு. க. ஸ்டாலின் தோல்வியை குறித்து மக்கள் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள் என்று சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க: ஈரோட்டில் TNPSC குரூப் 2 தேர்வு எழுத சென்ற வனகாப்பாளர்.. மினிவேன் மோதியதில் விபத்து.. கனவோடு சென்றவர் உயிர் கண நேரத்தில் பிரிந்தது!

முதல் அமைச்சர் விஜய் குறித்து விமர்சனம்

இதை குறிப்பிட்டு தான் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு தொகுதி தொகுதியாக முதல்வர் செல்வதாக விமர்சித்துள்ளார். சென்னையில் கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற சேகர்பாபு, முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் ஜெகதீஸ்வரி எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் சேகர்பாபுவிடம் விசாரணை

அந்த புகாரின் பேரில், போலீசார் பொது அமை திக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக நாம் விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் இன்று ஆஜரான சேகர் பாபுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: என்னை காவு கொடுக்க திட்டம்.. வாழ ஆசை படுகிறேன்.. தேனி சிறையில் இருந்து தப்பியது குறித்து கைதி பகீர் வீடியோ!

Follow Us