AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

SA Chandrasekar: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிடியாக அமைந்தது ஜன நாயகன் படத்தின் கசிவு. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மற்றொரு படத்தில் நடித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதுகுறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
எஸ்.ஏ.சந்திரசேகர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Apr 2026 11:10 AM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவும் அதிர்ந்த ஒரு விசயம் ஜன நாயகன் படத்தின் கசிவு தான். இந்தப் படத்தின் காட்சிகள் மட்டும் இன்றி மொத்த படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவினர் இடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் தளபதி விஜய் மற்றும் ஜன நாயகன் படக்குழுவிற்கு ஆதரவையும், இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இது கடந்த வாரம் முழுவது திரையுலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருந்த நிலையில் நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தின் கசிவால் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து இப்படி ஒரு விசயம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அந்த செய்தி உண்மையானதா இல்லையா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா?

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே பல சிக்கல்கள் எழும் என்று நடிகர் விஜய் ஜன நாயகான் படத்தின் தயாரிப்பாளரிடம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனநாயகன் படம் இணையத்தில் கசிவு குறித்து நாங்கள் அதிர்ச்சியடையவில்லை. எதிர்க்கட்சியின் காரணமாகவே இந்தக் கசிவு நிகழ்ந்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி தற்போது இனையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… ரசிகர்களின் கட்டளைக்கு ஏற்ப… இணையத்தில் வைரலாகும் கலகல பேச்சு

இணையத்தில் வைரலாகும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு:

Also Read… தனுஷ் நடிப்பை ஆ…னு பார்த்து இருக்கேன் – நடிகை மமிதா பைஜூ

Follow Us