யூத் முதல் உஸ்தாத் பகத் சிங் வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ அப்டேட் இதோ
This Week OTT Release Update: தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல தொடர்ந்து ஓடிடியிலும் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னப் படங்கள் வெளியானது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
யூத் படம்: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் கென் கருணாஸ். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் கென் கருணாஸ் தற்போது நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகம் ஆனப் படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி படம் ரூபாய் 82 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் டீன் ஏஜ் வாழ்க்கையில் இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் கையாழ்கிறார்கள் என்பதை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் இந்தப் படம் தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படம் காணக் கிடைக்கின்றது.
கா – தி ஃபாரஸ்ட்: நடிகை ஆண்டிரியா கதையின் நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் கா தி ஃபாரஸ்ட். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கலிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நாஞ்சில் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்த நிலையில் படம் சிம்ளி சௌத் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வலது வஷாதே கல்லன்: மலையாள சினிமாவில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் வெளியான படம் வலது வஷாதே கல்லன். இந்தப் படத்தில் நடிகர்கள் பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ், லீனா, லியோனா லிஷோய், ஷாஜு ஸ்ரீதர், நிரஞ்சனா அனூப், வைஷ்ணவி ராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ரிவெஞ் க்ரைம் த்ரில்லர் பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் சிம்ப்ளி சௌத் ஓடிடியில் தமிழ் மொழியிலும் காணக் கிடைக்கின்றது.




Also Read… ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!
உஸ்தாத் பகத் சிங்: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் உஸ்தாத் பகத் சிங். இதில் நடிகர் பவன் கல்யாண் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது பான் இந்திய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காண்க் கிடைக்கின்றது.
Also Read… அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர் – வைரலாகும் போட்டோ