AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Birthday Boy Chiyaan Vikrams Recent Video Viral On Social Media: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடும் நடிகர் விக்ரம். இவர் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சியான் விக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Apr 2026 18:59 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவர் அதிக அளவில் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகர் விக்ரமிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். அதற்கு எடுத்துக்காட்டு இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றதோ அதே அளவிற்கு மலையாள சினிமா ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் காரணாகவே அங்கு இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து தனது படங்களுக்காக உடல் எடையை கூட்டுவதும், உடல் எடையை குறைப்பது மட்டும் இன்றி அந்த கதாப்பாத்திரத்திற்காக விக்ரம் எடுக்கும் மெனக்கெடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. சாதாரண மனிதர்களை இமிடேட் செய்து நடிப்பதே கடினமான ஒன்று ஆனால் தெய்வதிருமள் படத்தில் விக்ரம் ஒரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நபராக மிகவும் அழகாக நடித்து இருப்பார். அவரது நடிப்பு மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா?

இப்படி எந்தவித ஹேட்டரேட்டும் இல்லாமல் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுபவர்தான் நடிகர் சியான் விக்ரம். இவர் இன்று 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சியான் விக்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் க்ளீன் சேவ் செய்து இருக்கும் விக்ரம் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். அவருக்கு 60 வயது என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள் என்பது போல அவரது தோற்றம் உள்ளது. மிகவும் ஸ்டைலாக நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திருமண நாளில் கணவருடன் வீடியோ வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

நடிகர் விக்ரம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)

Also Read… தியேட்டரில் கொண்டாடுன அளவுக்கு ஓடிடியில் கொண்டாடுவாங்களா ரசிகர்கள்? ஓடிடியில் வெளியான கென் கருணாஸின் யூத் படத்தின் விமர்சனம் இதோ

Follow Us