அஜித் சாருடன் பணியாற்றுவது எனது கனவு – அவருடன் படம் கைவிடப்பட்டது குறித்து விக்னேஷ் சிவன் பேச்சு!
Vignesh Shivan About Ajith Movie: பிரபல இயக்குநர்களின் வரிசையில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வெளியாகியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஜித் குமாருடன் பணியாற்றும் கனவு பற்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் வெளியான போட போடி (Poda Podi) என்ற படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurans Kompany). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில், கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகியிருந்தது.
முற்றிலும் எதிர்காலத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமாருடன் (Ajith Kumar) பணியாற்றும் கனவு குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: திருமண நாளில் கணவருடன் வீடியோ வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!




அஜித் குமாருடன் பணியாற்றவேண்டும் என்ற கனவு குறித்து விக்னேஷ் சிவன் பேச்சு:
அந்த நேர்காணலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “அஜித் குமார் சாருடன் திரைப்படத்தில் பணியாற்றவேண்டும் என்பது எனது கனவு. அந்த வகையில் அவருடன் AK62 படத்திற்காக நான், கிட்டத்தட்ட 3- 4 ஆண்டுகள் உழைத்தேன். ஆனால் பட்ஜெட் மற்றும் தயாரிப்பு சிக்கலின் காரணமாக அந்த படம் கைவிட்டுப்போனது. மேலும் அந்த படத்தில் 2வது பகுதியை மாற்றவேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்தது. எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், இயக்குநர் பிரசாந்த் நீல் சாரைப் பொறுத்தவையில் கேஜிஎஃப் படத்தில் அவரது பார்வைக்கு ஆதரவளிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இருந்தது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம் – விக்னேஷ் சிவன்
நானும் KGF, RRR போன்ற படங்களைப் பார்த்தேன், மேலும் நான் அஜித்குமார் சாரின் ரசிகன் என்பதால், அதுபோன்ற ஒரு படத்தை அவருடன் இயக்க நினைத்தேன். ஆனால், அந்த பட்ஜெட்டுக்குத் தயாரிப்புத் தரப்பு ஆதரவளிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு:
பிரதீப் ரங்கநாடகனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் இருந்தவருகிறது. இன்னும் இப்படமானது ரூ 50 கோடி வசூலை தாண்டவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படத்தின் வெற்றி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.