AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதீப் ரங்கநாதனின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம் – விக்னேஷ் சிவன்

Vignesh Shivan said we trying LIK Pradeep 4th 100 crore movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரதீப் ரங்கநாதனின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம் – விக்னேஷ் சிவன்
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2026 17:10 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்ஹ்டில் நட்டிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கௌரி ஜி கிருஷ்ணன், மாளவிகா, ஷா ரா, ஆனந்த் ராஜ், மிஷ்கின், சுனில் ரெட்டி, விடிவி கணேஷ், அமிர்தா ஐயர் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு ப்ரஷர் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது அவரது நடிப்பில் முன்பாக வெளியான மூன்று படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிய நிலையில் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் நன்றாக இருந்தாலும் 100 கோடி வசூலிக்கவில்லை என்றால் படம் நன்றாக இல்லை என்று முடிவு செய்துவிடுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரதீப்பின் 4-வது 100 கோடி படமாக இதை மாற்ற முயற்சிக்கிறோம்:

நாங்கள் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ஏப்ரல் 17-ஆம் தேதி 2026-ம் ஆண்டு மீண்டும் வெளியிடுகிறோம். தயவுசெய்து படத்தைப் பார்த்து ஆதரவு அளியுங்கள். பிரதீப் ரங்கநாதனின் 100 கோடி வசூலித்த நான்காவது படமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தப் படத்தை நிச்சயமாக 100 கோடி வசூலிக்கும் படமாக நாங்கள் மாற்றுவோம் என்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார்.

Also Read… நான் செய்த பெரிய தவறாக முத்துராமலிங்கம் படத்தை பார்க்கிறேன் – கௌதம் ராம் கார்த்திக்

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் பேச்சு:

Also Read… தல அஜித்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் பில்லா படம்!

Follow Us