AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விக்னேஷ் ராஜா நீ ஒரு மேதை – இணையத்தில் வைரலாகும் தனுஷின் பதிவு!

Dhanush Thanks To Director Vignesh Raja : தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.

விக்னேஷ் ராஜா நீ ஒரு மேதை – இணையத்தில் வைரலாகும் தனுஷின் பதிவு!
தனுஷ் - விக்னேஷ் ராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2026 15:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி இவர் கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நாயகனாக நடித்தார். அந்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகக்து. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிலும் அடுத்தடுத்தப் படங்கள் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர.

இந்த கர படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்:

அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இந்த கர படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் விக்னேஷ் ராஜா நீ ஒரு ஜீனியஸ். இந்த கர படத்திற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Manu Anand: அஜித் சார் எப்போதும் பிக் ஸ்டார் என்ற அந்தஸ்தை காட்டியதில்லை – இயக்குநர் மனு ஆனந்த் பேச்சு!

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் பட கூட்டணி? வைரலாகும் தகவல்

Follow Us