AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் பட கூட்டணி? வைரலாகும் தகவல்

Pariyerum Perumal Movie Team Reunite Again: தமிழ் சினிமாவில் மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் பட கூட்டணி? வைரலாகும் தகவல்
பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போதுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Apr 2026 17:00 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவியாளராக தனது பணியைத் தொடங்கி பிறகு உதவி இயக்குநராக பணியாற்றியும் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக இயக்குநர் மாரி செல்வராஜ் காட்டியிருப்பார். மேலும் படிப்பு ஒரு மனிதனை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதையும் தெளிவுப்படுத்தி இருப்பார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் காளமாடன் ஆகியப ப்டங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மீண்டும் இணையும் பரியேறும் பெருமாள் பட கூட்டணி?

இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷை வைத்து ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இருந்தார்; அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும், தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில் மும்முரமாக இருப்பதால், அவர் உடனடியாக மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே, மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்திற்காக, தனது முதல் படத்தின் நாயகனான கதிருடன் மீண்டும் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… ஏழு கடல் ஏழு மலை படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: ஜன நாயகன் படத்தை கசியவிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்!

Follow Us