AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Asha Bhosle: எல்லாமே செம ஹிட்.. ஆஷா போஸ்லே பாடிய டாப் 10 தமிழ் பாடல்கள் லிஸ்ட்!

Asha Bhosle Tamil Songs: இந்திய சினிமாவில் பிரபல பழம்பெரும் பாடகியாக இருந்துவந்தவர் ஆஷா போஸ்லே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அந்த வகையில் தமிழில் இவர் பாடி, ஹிட்டடித்த டாப் 10 பாடல்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Asha Bhosle: எல்லாமே செம ஹிட்.. ஆஷா போஸ்லே பாடிய டாப் 10 தமிழ் பாடல்கள் லிஸ்ட்!
பாடகி ஆஷா போஸ்லேImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Apr 2026 13:59 PM IST

பான் இந்திய சினிமாவில் பழம்பெரும் பாடகியாக இருந்துவந்தவர் ஆஷா போஸ்லே (Asha Bhosle). இவர் வெறும் பாடகியாக மட்டுமில்லாமல் நடிகை, சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் பிஸ்னஸ் என பல்வேறு பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தனது குரல் வளத்தினால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் இவர் என்றே கூறலாம். அந்த வகையில் இவர் பலவேறு விருதுகளையும் தனது பாடல்களுக்காக பெற்றுள்ளார். பத்ம விபூஷண், கின்னஸ் சாதனை பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். இவர் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு பெங்காலி என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman), இளையராஜா (Ilaiyaraaja) என பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

அதிலும் ராம ராஜன் நடிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையமையில் ஊர் பாட்டுக்காரன் படத்தில் இவர் பாடிய “செண்பகமே செண்பகமே” பாடல் இன்றுவரையிலும் ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் பாடகி ஆஷா போஸ்லே பாடிய டாப் 10 தமிழ் பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: பெரும் இழப்பு.. பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பாடகி ஆஷா போஸ்லே பாடிய டாப் 10 தமிழ் சூப்பர் ஹிட் பாடல்கள் லிஸ்ட்:

  1. ராம ராஜனின் ஊர் பாட்டுக்காரன் படத்தில் “செண்பகமே செண்பகமே” பாடல்.
  2. கமல்ஹாசனின் ஹே ராம் திரைப்படத்திலிருந்து “நீ பார்த்த பார்வை” பாடல்.
  3. ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் “கொஞ்ச நேரம் பாடல்”.
  4. ஆர். மாதவனின் அலை பாயாதே படத்தில் “செப்டம்பர் மாதம் பாடல்”.
  5. மோகன்லாலின் இருவர் திரைப்படத்திலிருந்து “வெண்ணிலா வெண்ணிலா பாடல்”.
  6. விஜய் – சூர்யாவின் நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து “எங்கெங்கே பாடல்”.
  7. விக்ரம் – ஐஸ்வர்யா நடித்த மீரா படத்திலிருந்து “ஹோ பட்டர்ஃபிளை பாடல்”.
  8. நான் சொன்னதே சட்டம் திரைப்படத்திலிருந்து “ஒரு தேவதை வந்தது பாடல்”.
  9. ராம ராஜனின் புதுப்பாட்டு படத்திலிருந்து “எங்க ஊரு காதல் பத்தி பாடல்”.
  10. விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் படத்திலிருந்து “சாத்து நட சாத்து” என்ற பாடல்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படம் 100 சதவீதம் தியேட்டரில் வெளியாகும்.. ஆனால் – திருப்பூர் சுப்ரமணியன்!

இவ்வாறு பாடகி ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் பாடகி ஆஷா போஸ்லே (92 வயது) இன்று 2026 ஏப்ரல் 12ம் தேதியில் வயது மூப்பு காரணத்தால் காலமானார். இவரின் இறப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பிரபலங்களும் இரங்கலை தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us