AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: தி பாரடைஸ் படத்தில் எனது ரோல் வித்தியாசமாக இருக்கும் – கயாடு லோஹர்

Kayadu Lohar Role In The Paradise Movie: தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து புது படங்களில் நடித்துவருபவர் கயாடு லோஹர். இவர் சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில், நானியுடன் நடித்துள்ள தி பாரடைஸ் படத்தில் தனது வேடம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kayadu Lohar: தி பாரடைஸ் படத்தில் எனது ரோல் வித்தியாசமாக இருக்கும் – கயாடு லோஹர்
கயாடு லோஹர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Apr 2026 17:50 PM IST

நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து பெரிய திரைப்படங்கள் தயாராகிவருகிறது என கூறலாம். இவர் தமிழில் இறுதியாக டிராகன் (Dragon) திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்தாக இதயம் முரளி (Idhayam Murali), இம்மார்ட்டல், தி பாரடைஸ் (The Paradise), பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) போன்ற திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருந்தார். அந்த வகையில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள புது திரைப்படம்தான் பள்ளிச்சட்டம்பி. இப்படத்தில் நடிகர் டோவினோ தாமஸுக்கு (Tovino Thomas) ஜோடியாக நடித்திருந்த நிலையில், சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.

இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. மேலும் இவர் தெலுங்கு நடிகர் நானிக்கு (Nani) ஜோடியாக தி பாரடைஸ் படத்தில் “சுப்புலக்ஷ்மி” (Subbalakshmi) என்ற வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கயாடு லோஹர், தி பாரடைஸ் படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியீடு!

தி பாரடைஸ் படத்தில் தனது வேடம் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர்:

நடிகை கயாடு லோஹர் அதில் பேசுகையில், “தி பாரடைஸ் படத்தில் எனது கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். நான் இதுவரை நடித்திருந்த படங்களில் உள்ள கதாபாத்திரத்தை விடவும், இப்படத்தில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நான் இவ்வாறு ஒரு வேடத்தில் நடிப்பேனா என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன். மேலும் இப்படத்தைப் பற்றி இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இல்லாதவனுக்காக போராடுறவனுக்கு எதிராக இல்லாதவன நிறுத்துரதுதான் அரசியல் – காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகை கயாடு லோஹரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகை கயாடு லோஹர் இந்த தி பாரடைஸ் படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் சில வாரங்களில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us