AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Manithan Deivamagalam: செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியீடு!

Manithan Deivamagalam Movie Sneak Peek: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் செல்வராகவன். இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மனிதன் தெய்வமாகலாம். இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளிட்டுள்ளது.

Manithan Deivamagalam: செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ வெளியீடு!
செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Apr 2026 15:49 PM IST

நடிகர் செல்வராகவனின் (Selvaraghavan) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம் (Manithan Deivamagalam). இந்த படமானது உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் (Dennis Manjunath) இயக்க, பிரம்மாண்டமாக தயாராகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் செல்வராகவன் லீட் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை குஷீ ரவி (Kushee Ravi) நடித்திருந்தார். இது இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். இந்த படமானது இவர்கள் இருவருக்குமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படமானது ஒரு கிராமத்தில் மக்கள் ரோடு, மின்சாரம் இல்லாமல் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

அதிலிருந்து கதாநாயகன் அவர்களை எவ்வாறு மீட்டுக் கொடுக்கிறார் என்பதே படத்தின் கதையாகும். இப்படமானது குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருந்த நிலையில், கடந்த 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் படக்குழு ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மலையாள சினிமாவில் கட்டாளன் படம் எப்போது வெளியாகிறது? அப்டேட் இதோ

மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் ஸ்னீக் பீக் குறித்த வீடியோ பதிவு:

இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் ஆக்ஷன் கதாநாயகனாக, சாதாரண ஹோட்டல் வைத்திருப்பவராக நடித்துள்ளார். இவர் தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக படும்ப்பாடு மற்றும் அவர் அவரின் கிராமத்திற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தாரா? அதற்காக அவர் சந்திக்கும் சம்பவங்கள் குறித்ததே இப்படத்தின் மைய கதை அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் சாரை கடைசி முறையாக கொண்டாட வேண்டாமா? திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் – நடிகை பூஜா ஹெக்டே கண்டனம்!

மேலும் இயக்குநராக செல்வராகவனின் இயக்கத்தில் மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2 போன்ற திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இதில் மெண்டல் மனதில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், முற்றிலும் ரொமாண்டிக் காதல் கதையில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலையில் உள்ளது.

மேலும் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படமும் இந்த 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us