Selvaraghavan: கிராமத்து வசதிக்காக போராடும் கதாநாயகன்.. வெளியானது செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட ட்ரெய்லர்!
Manithan Deivamagalam Movie Trailer : நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். இவரின் நடிப்பில் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் மனிதன் தெய்வமாகலாம். இப்படம் சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் செல்வராகவன் (Selvaraghavan). இவர் தமிழில் நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த விதத்தில் இவர் தற்போது சினிமாவில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவரே கதாநாயகனாக நடித்துள்ள புது திரைப்படம்தான் “மனிதன் தெய்வமாகலாம்” (Manithan Deivamagalam). இந்த படத்தை அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் (Dennis Manjunath) இயக்க, வ்யோன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் லீட் கதாநாயனக்காக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை குஷீ ரவி (Kushee Ravi) நடித்துள்ளார். மேலும் இதில் கௌசல்யா, சதீஸ், மைம் கோபி, மகேந்திரன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இதன் டீசரை கடந்த சில வாரங்களுக்கு முன் தனுஷ் வெளியிட்டிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படம் வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த விதத்தில் இதன் ட்ரெய்லரை இன்று (02/04/2026) படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்… மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்
நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் பட ட்ரைலர் குறித்த எக்ஸ் பதிவு:
The Thrilling Tralier of #ManithanDeivamagalam is Out Now…! #ManithanDeivamagalam From April 10
🎶 #AKPrriyan@selvaraghavan @dennisfilmzone @VyomEntOfficial #VijayaSathish @KusheeRavi #Kausalya #YGeeMahendran @mimegopi #RSSatiz @Ravivarmarvdop… pic.twitter.com/tZRnPXwIhs
— Saregama South (@saregamasouth) April 2, 2026
செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு :
இந்த படத்தில் நடிகர் செல்வராகவன் ஒரு சாதாரணமான ஹோட்டல் வைத்திருக்கும் நபராக நடித்துள்ளார். பல நாட்களாக திருமணத்திற்காக பெண் தேடிஅலையும் இவருக்கு, அழகான மனைவி அமைக்கிறார். அவர் எந்த அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் வசித்துவருகிறார். ஓட்டுக்காக மட்டுமே வரும் அரசியல்வாதிகளுடன், மல்லுக்கட்டி தனது கிராமத்திற்கு எவ்வாறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருகிறார் என்பதே படத்தின் கதை. ரோடு, மின்சாரம், மருத்துவம், பள்ளி என அடிப்படை வசதி இல்லாத கிராமத்திற்கு, ஒரு தெய்வமாக எவ்வாறு உதவி செய்கிறாரா என்பதே மனிதன் தெய்வமாகலாம் படத்தின் கதை. இதுவே இந்த படத்தின் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷிற்கு குடிப்பழக்கம் இருக்கா? எனக்கு தெரிந்தவரை அந்த பழக்கம் இருக்கு – ரகசியம் பகிர்ந்த சமந்தா!
இந்த படமானது ஆக்ஷன் திரில்லர் ஜானரில் அமைந்திருக்கும் நிலையில், வரும் 2027 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், 13 முதல் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் திரையரங்கு சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.