AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள சினிமாவில் கட்டாளன் படம் எப்போது வெளியாகிறது? அப்டேட் இதோ

Malayalam Kattalan Movie Release Update | மலையாள சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் கட்டாளன். இந்த கட்டாளன் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும் மே மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் கட்டாளன் படம் எப்போது வெளியாகிறது? அப்டேட் இதோ
கட்டாளன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Apr 2026 14:33 PM IST

மலையாள சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது மலையாள சினிமாவில் உருவாகி உள்ள படம் கட்டாளன். இயக்குநர் பால் ஜார்ஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த கட்டாளன் படத்தில் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், கபீர் துஹான் சிங், பார்த் திவாரி, சுனில், துஷாரா விஜயன், ஜெகதீஷ், சித்திக், ராஜ் திரன்தாசு, ஷோன் ஜாய், ஹிப்ஸ்டர், ஆன்சன் பால், ஹனான் ஷா, ஷனூத் இப்ராஹிம், பிபேக் தாபா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஷரீஃப் முஹம்மது தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் பி. அஜனீஷ் லோக்நாத் மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் இணைந்து இசையமைத்து ஊள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் கட்டாளன் படம் எப்போது வெளியாகிறது?

தொடர்ந்து கட்டாளன் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உமாபதி ராமையா இயக்கத்தில் பொலிட்டிகல் சட்டையர் பாணியில் வெளியான TN 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

கட்டாளன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து விலகிய ஷாருக்கான்..? இணைந்த தெலுங்கு பிரபலம் யார் தெரியுமா?

Follow Us