AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: அப்போதிருந்தே விஜய்யின் வளர்ச்சியை கூட இருந்து பார்த்திருக்கிறேன் – நடிகர் சூர்யா பகிர்ந்த விஷயம்!

Suriya And Vijay Friendship: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவர் முன்னதாக நேரக்கனல் ஒன்றில் பேசியிருந்த அவர், தளபதி விஜய்யின் வளர்ச்சி மற்றும் அவரின் குணம் குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Suriya: அப்போதிருந்தே விஜய்யின் வளர்ச்சியை கூட இருந்து பார்த்திருக்கிறேன் – நடிகர் சூர்யா பகிர்ந்த விஷயம்!
தளபதி விஜய் மற்றும் சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Apr 2026 16:23 PM IST

நடிகர் சூர்யா (Suriya) தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பெரிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). 2025ம் ஆண்டில் வெளியான இந்த படம் சூர்யாவிற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. அதையடுத்து கருப்பு (karuppu), விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சூர்யா47 போன்ற படங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் இவர் சினிமாவில் முதல் முதலாக லீட் வேடத்தில் நடித்தபடம் நேருக்கு நேர் (Nerukku Ner) என்ற படம் என அனைவருக்கும் தெரியும். இந்த முதல் படத்திலே தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து திரையை பகிர்ந்திருந்தார். இப்படத்திலிருந்து இவர்களின் நட்பும் வளர, ப்ரண்ட்ஸ் என்ற படத்திலும் இரண்டவது முறையாக இணைந்து நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரின் காம்போ சிறப்பாக தமிழ் சினிமாவில் இருந்தது என்று கூறலாம். இப்படத்திற்கு பிறகு இணைந்து எந்த படங்களில் நடிக்காவிட்டாலும், இருவரின் நட்பு அப்படியே இருக்கிறது. அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சூர்யா, விஜய்யின் வளர்ச்சி மற்றும் அவரின் குணம் குறித்து பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்

தளபதி விஜய்யன் வளர்ச்சி மற்றும் குணம் குறித்து பகிர்ந்த நடிகர் சூர்யா:

நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில், “நான் விஜய்யோட திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து அசந்துபோயிருக்கேன். அவரை எனது கல்லூரி நாட்களிலிருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதனால அவரின் வளர்ச்சி என்னவென்று கூடவே இருந்து பார்த்த அனுபவம் எனக்கு இருக்கு. எனக்காக அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கும்போது, ஒரே ஒரு போன் காலில் அகரம் அறக்கட்டளை விளம்பரத்தில் நடிக்க ஒத்துக்கிட்டாரு. என்னிடம் போனில்,”அதெல்லாம் பண்ணிரலாம் மாமா” என சொன்னாரு.

இதையும் படிங்க: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் – அட்லீ ஓபன் டாக்!

ஹீரோவா சிரோவா என்ற ஷாட் பிலிம் எடுத்தோம், அதில் எங்களுடன் இணைந்து நடித்திருந்தார். அதற்காக நேரம் ஒதுக்கி, எங்களை விடவும் சிறப்பாக நடித்தவர் அவர்தான். அவரின் காமெடி டைமிங் மற்றும் அவரின் நம்பிக்கையின் அளவு எனக்கு பிடிக்கும். அவர் சினிமாவில் லீட் நாயகனாக மேலே சென்று கொண்டே இருக்காரு, அவரின் உறுதி தன்மை எனக்கு பிடிக்கும். அவர் மற்றவர்களிடம் பழகும் விதம் ரொம்ப பிடிக்கும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஜன நாயகன் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜன நாயகன் திரைப்படமானது தொடர்ந்து சிக்கல்களை சந்தித்துவருகிறது. அதற்காக ஒரு நண்பனாகவும் திரை பிரபலமாகவும், தளபதி விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

Follow Us