AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏழு கடல் ஏழு மலை படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

Yezhu Kadal Yezhu Malai Movie Distribution Rights Bagged By Golden Sparrow Production : இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி பல திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
ஏழு கடல் ஏழு மலைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 17:44 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் ராம் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அழுத்தமான கதைகளை இயக்கி வந்த இயக்குநர் ராம் இயக்கத்தில் மிகவும் ஃபீல் குட் படமாக இந்த பறந்து போ இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மா அப்பா என இருவரும் வேலைக்குச் செல்லும் போது தனியாக வளரும் குழந்தையின் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் அந்த குழந்தைக்காக பெற்றோர் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதையும் சிறப்பாக படமாக்கி இருந்தார் இயக்குநர் ராம்.

இந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான படம் தான் ஏழு கடல் ஏழு மலை. நடிகர் நிவின் பாலி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி மற்றும் சூரி இருவரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் ஸ்கிரீன் செய்யப்பட்டு பல நாடுகளில் விருதுகளை குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை படம்:

ரொமாண்டிக் சைக்கலாஜிகள் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கனவுப் பயணமான… படமான… ஏழுகடல் ஏழு மலையின் திரையரங்க வெளியீட்டைக் கையிலெடுத்துக் கொண்ட கோல்டன் ஸ்பாரோ நிறுவனத்திற்கு நன்றி. இணைந்து பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Arya: மிஸ்டர் எக்ஸ் படம் வெளியானது கௌதம் கலக்கிட்டாருனு எல்லாரும் சொல்லுவாங்க- ஆர்யா பேச்சு!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ViRosh: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Follow Us