AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படங்கள் முதல் வெப் சீரிஸ் வரை… தமிழில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்னென்ன பார்க்கலாம்

OTT Movies This Week: தொடர்ந்து திரையரங்குகளில் வாரம் வாரம் புதுப் படங்கள் வெளியாகி வருவது போல ஓடிடியில் படங்கள் மற்றும் இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த வார விடுமுறையில் என்னென்ன படங்கள் மற்றும் இணையதள தொடர்களைப் பார்க்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.

படங்கள் முதல் வெப் சீரிஸ் வரை… தமிழில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்னென்ன பார்க்கலாம்
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Apr 2026 20:36 PM IST

தாய் கிழவி படம்: தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியகா நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

காக்கி சர்கஸ்: தமிழ் மொசியில் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ள இணையதள தொடர் காக்கி சர்கஸ். இதனை இயக்குநர் அமீர் பரீஃப் இயக்கி உள்ள நிலையில் இந்த தொடரில் நடிகர்கள் முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கௌதமி நாயர் மற்றும் வின்சு ராச்சே இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்த தொடர் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காதல் ரீசெட் ரிப்பீட்: தமிழ் சினிமாவில் கடந்த மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திடையரங்குகளில் வெளியான படம் காதல் ரீசெட் ரிப்பீட். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் எழுதி இயக்கி இருந்தார். இந்த  காதல் ரீசெட் ரிப்பீட் படத்தில் நடிகர் மதுமகேஷ் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் அவருடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர், ஜியா சங்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் எனப் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்ற இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… நடிகை கயடு லோஹரின் பர்த்டே ஸ்பெஷல்… தொடர்ந்து வெளியாகும் வீடியோ மற்றும் போஸ்டர்ஸ்

காதல் கதை சொல்லவா: நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் காதல் கதை சொல்லவா. இந்தப் படத்தை இயக்குநர் சனில் கலத்தில் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் நகுல், ஜெயராம், ஆத்மிகா, ரித்திகா சென் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Pooja Hegde: விஜய் சாரை கடைசி முறையாக கொண்டாட வேண்டாமா? திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் – நடிகை பூஜா ஹெக்டே கண்டனம்!

Follow Us