தனுஷ் முதல் சூர்யா வரை.. இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா? இவர் பிரபல நடிகரின் மனைவியும் கூட!
Malayalam Actress Childhood photo: தென்னிந்திய சினிமாவில் பலவாறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை என அடையாளம் தெரிகிறதா? அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சமூக ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்கள் வைரலாகிவருவதுண்டு. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் கியூட்டாக இருக்கும் சிறுமி எந்த நடிகை-னு தெரியுமா?. இவர் பிரபல மலையாள நடிகையாவார் (Malayala Actresss). தனது சிறுவயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அதை தொடர்ந்து இவர் நிவின் பாலி (Nivin Pauly) முதல் தனுஷ் (Dhanush) வரை பல்வேறு நடிகர்களுக்கு படங்களில் ஜோடியக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவந்தவர். தற்போது குறைவான படங்களிலே நடித்துவருகிறார். தமிழில் இவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
2010ம் ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். மேலும் இவர் மலையாள நடிகர் ஒருவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். மேலும் இவர் தற்போது சூர்யாவிற்கு ஜோடியாகவும் புது படத்தில் நடித்துவருகிறார். இப்போது இந்த நடிகை யார் என தெரிந்திருக்கும். இந்த சிறுமி வேறுயாருமில்லை மலையாள நடிகை நஸ்ரியா நசீம்தான் (Nazriya Nazim).




இதையும் படிங்க: சூர்யாவின் வாடிவாசல் படத்தில் எனது பங்கு முக்கியமானது – அமீர் சொன்ன உண்மை!
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை நஸ்ரியாவின் சினிமா பயணம் :
நடிகை நஸ்ரியா நசீம் மலையாள சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமாவின் மீதுள்ள பெரும் ஆர்வம் காரணமாக மாட் டேட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக வெளியான நேரம் என்ற படத்தில் லீட் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகியிருந்தார். இதையடுத்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்துவந்த இவர், நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு தியேட்டரில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ்… நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா
இவர்கள் இருவரும் 2013ம் ஆண்டிலிருந்தே காதலித்துவந்த நிலையில், 2014ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக நடிகை நஸ்ரியா நசீம் எந்த படங்களிலுமே நடிக்கவில்லை. இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு 6 ஆண்டுகளுக்கு பிறகு, ட்ரான்ஸ் என்ற படத்தில் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்து, ஒரு மாஸ் ரீ – என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் தற்போது நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.