Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nivin Pauly: ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஷூட்ங்கில் மீண்டும் இணைந்த நிவின் பாலி.. வைரலாகும் பதிவு!

Benz Movie Shooting Update: மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவர் தமிழில் நெகடிவ் வேடத்தில் நடித்துவரும் படம்தான் பென்ஸ். இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தது குறித்து நிவின் பாலி வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Nivin Pauly: ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஷூட்ங்கில் மீண்டும் இணைந்த நிவின் பாலி.. வைரலாகும் பதிவு!
நிவின் பாலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2025 23:08 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் தயாரிப்பில் LCU- யுனிவர்ஸில் உருவாகிவரும் படம்தான் பென்ஸ் (Benz). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கிவருகிறார். இந்த படத்தில் முன்னணி நாயகனாக ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க,  அவருடன் நடிகர்கள் நிவின் பாலி (Nivin Pauly), சம்யுக்தா மேனன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த திரைப்படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துவருகிறார். இந்த திரைப்படமானது லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் கைதி, விக்ரம் மற்றும் லியோ (Leo) போன்ற படங்களை தொடர்ந்து, 4வது திரைப்படமாக இந்த பென்ஸ் படமானது உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூன் மாதத்தில் தொடங்கிய நிலையில், தொடங்கிய சில நாட்களுக்கு பிறகுதான் நடிகர் நிவின் பாலி ஷூட்டிங்கில் இணைந்தார். மேலும் அவர் மற்ற படங்களில் பிஸியாகவும் இருந்துவரும் நிலையில், அதிலும் தனது கவனத்தை செலுத்திவந்தார். இந்நிலையில் இந்த பென்ஸ் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஹாட்ரிக் வெற்றியா? – பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட விமர்சனம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்ததாக நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் நடிகர் நிவின் பாலி, “Stepped in as Walter” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் வால்டர் என்ற கதாபாத்திர வேடத்தில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் நிவின் பாலி புகைபிடிப்பது போன்ற இருக்கிறது. இந்த புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படமானது எப்போது வெளியாகவும் எனவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பென்ஸ் திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த பென்ஸ் படமானது லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களை போல போதை பொருள் கடத்தல் தொடர்பாக இல்லாமல், தங்கம் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி , “வால்டர்” என்ற நெகடிவ் வேடத்தில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாருடன் படம்… ஆனால் அவர் என்னை நம்பணும்- மாரி செல்வராஜ் சொன்ன விஷயம்!

இந்த படமானது இரு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025ம் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என என கூறப்படும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் இப்படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.