Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pradeep Ranganathan: மமிதா என்னை உண்மையாகவே உதைச்சாங்க.. அதனால் என்னுடைய போன் நொறுக்கிடுச்சி.. பிரதீப் ரங்கநாதன் கலகல பேச்சு!

Pradeep Ranganathan About Mamita Baiju: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இதுவரை குறைவான படங்களே வெளியானாலும், அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் டியூட் என்ற படமானது வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது, அவரின் போன் நொறுங்கிய சம்பவம் பற்ற பிரதீப் ரங்கநாதன் ஓபனாக பேசியுள்ளார்.

Pradeep Ranganathan: மமிதா என்னை உண்மையாகவே உதைச்சாங்க.. அதனால் என்னுடைய போன் நொறுக்கிடுச்சி..  பிரதீப் ரங்கநாதன் கலகல பேச்சு!
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2025 21:49 PM IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 3வது படமாக வெளியாக காத்திருக்கும் படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார் இந்த டியூட் படமானது காதல், எமோஷனல் மற்றும் ஆக்ஷ்ன் என மாறுபட்ட கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், நாளை 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படமானது வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜுவுடன் நடிக்கும்போது நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் பிரதீப் ரங்கநாதனின் ஐ போன் 12 ப்ரோ (iPhone 12 Pro) போன் நொறுங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புது காம்போ… வெற்றிமாறன் – சிலம்பரசனின் ‘அரசன்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் – உறுதி செய்த படக்குழு

மமிதா பைஜூ குறித்து பிரதீப் ரங்கநாதன் சொன்ன கலகல சம்பவம்

அந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், மமிதா பைஜூ பற்றியும் தெரிவித்திருந்தார். அதில் பிரதீப் ரங்கநாதன், “இந்த டியூட் படத்தின் போட்டோ ஷூட் ஒன்றின்போது, மொட்டைமாடியில் புகைப்படம் எடுத்தோம். அதை கூட மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த போட்டோ ஷூட் பண்ணும்போது, அவர் என்னை உண்மையாகவே ரொம்ப உதைச்சாங்க. அவர் உதைத்த உதையில் எனது பாக்கெட்டில் இருந்த போன் பறந்து, மற்றொரு மொட்டை மாடியில் விழுந்து உடைஞ்சிருச்சி.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு புது ட்ரெய்லரை வெளியிட்டது காந்தாரா சாப்டர் 1 படக்குழு

நான் இன்னும் ஐ போன் 12 ப்ரோ மேக்ஸ் போன் தான் யூஸ் பண்ணுறேன். மேலும் எனக்கு மமிதா பைஜூதான் பணம் கொடுத்து புதிய போன் வாங்கி கொடுக்கணும்” என நடிகர் பிரதீப் ரங்கநாதன் மேடையில் கலகலப்பாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

மமிதா பைஜூ குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோ பதிவு

இந்த டியூட் படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படமானது சுமார் ரூ 65 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், வெளியீட்டிற்கு முன்னே சுமார் ரூ 32 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாம். மேலும் திரையரங்குகளிலும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.