விறுவிறுப்பாக நடைபெறும் AK 64 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
AK 64 Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது கார் ரேசிங்கில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை இரண்டு படங்கள் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி வெளியானது. அதன்படி அந்தப் படம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளைத் தாண்டி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் பலர் இந்தப் படம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று தங்களது விமர்சனத்தைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என்பதால் அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளியான படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காட்சிகள் மீண்டும் ரீ கிரியேட் செய்தது. இது அஜித் குமார் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் AK 64 படம்:
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அவரது கார் ரேஸ் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியையும் பெற்றார். இது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகளைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இரண்டாவது முறையாக அஜித் குமார் இணைய உள்ள தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி இந்தப் படத்தின் பணிகள் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் வருகின்ற 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிச்சுடு கபிலா… பைசன் காலமாடன் படத்தின் ட்ரெய்லரைப் புகழ்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#AK64 – Official Announcement..⏳ #Ajithkumar completed his First Season of Racing & He’ll be Concentrating on #AK64 Next..🤙 Gonna be a Quick Project & aiming for Summer 2026 Release..🔥🤝 Thala is Back To Cinema..⭐ pic.twitter.com/icdWIJGVbf
— Laxmi Kanth (@iammoviebuff007) October 15, 2025
Also Read… முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி – நடிகர் மணிகண்டன்