Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெண்டல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களை விமர்சித்த சதீஸ்!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது. பிரபலங்கள் பலரும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து விமர்சங்களை தெரிவித்து வருகின்றனர்.

மெண்டல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கு… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களை விமர்சித்த சதீஸ்!
சதீஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Oct 2025 14:33 PM IST

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடன இயக்குநர் சதீஸ் (Dance Master Sathish). இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் பலவற்றில் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். இவரது நடன இயக்கத்தில் வெளியான பலப் பாடல்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடன இயக்குநராக மட்டும் இன்றி பலப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் சதீஸ் நடித்துள்ளார். குறிப்பாக காமெடி கதாப்பாத்திங்கரங்களில் இவரது நடிப்பு சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த சதீஸ் தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். அதன்படி சமீபத்தில் சதீஸ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கிஸ்.

கிஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சதீஸ் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து இருந்தார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் சதீஸ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸா இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா தெரியல:

அந்த பேட்டியில் இயக்குநர் சதீஸ் கூறியதாவது, இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களின் தேர்வு மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சித்துள்ளார். இந்த மாதிரியான நெகட்டிவ் பிரபலம் அடைந்தால் வாழ்க்கையில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது போல தவறான உதாரணமாக் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர் அகோரி கலையரசன், அரோரா, மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அவர்களை விமர்சித்து பேசினார். மேலும் இணையத்தில் ரசிகர்கள் கூறுவது போல அது ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் இடம் போல உள்ளது என்றும் அங்கு மருத்துவர்களை அனுப்பு ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… அதர்வாவின் இதயம் முரளி படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

நடன இயக்குநர் சதீஸ் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Raahul A (@romeopicturesoffl)

Also Read… ரெட்டை கதிரே… சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது