Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhruv Vikram: கஷ்டமான தருணங்களில் அப்பாதான் எல்லாம் – துருவ் விக்ரம் உருக்கம்

Dhruv Vikram About Chiyaan Vikram: துருவ் விக்ரம் நடிப்பில் வரும் 2025 தீபாவளியை ஒட்டி, பைசன் படமானது வெளியாகவுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், தனது தந்தை சியான் விக்ரமின் கஷ்டங்கள் மற்றும் போராட்டங்கள் தனக்கு உந்துதலாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Dhruv Vikram: கஷ்டமான தருணங்களில் அப்பாதான் எல்லாம் – துருவ் விக்ரம் உருக்கம்
சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2025 08:30 AM IST

கடந்த 2019ம் ஆண்டில் வெளியான ஆதித்ய வர்மா (Aditya Verma) திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் தமிழ் பிரபல நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் ஆவார். இவர் இந்த படத்தைத் தொடர்ந்து மேலும், வர்மா, மகான் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கும் படம்தான் பைசன் (Bison). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன், காதல் மற்றும் கபடி தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும் இந்த படம்தான் காணாது முதல் திரைப்படம் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் துருவ் விக்ரம் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) நடித்துள்ளார். மேலும் பசுபதி, லால், கலையரசன் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட துருவ் விக்ரம், தனது தந்தையின் போராட்டங்கள் மற்றும் வெற்றிப்பாதை, தனக்கு உந்துதலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கஷ்ட நேரங்களில் தனது அப்பாவை நினைப்பது பற்றியும் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?

தந்தை சியான் விக்ரமின் போராட்டங்கள் குறித்து பேசிய நடிகர் துருவ் விக்ரம் :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் துருவ் விக்ரமிடம், சியான் விக்ரமிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயம் என்ன என்பது பற்றி கேள்வி கற்றிருந்தார். அதற்கு பதிலளித்த துருவ் விக்ரம், ” எனது அப்பா அடிக்கடி சொல்லும் விஷயம், வெற்றியை தலைக்கு கொண்டுபோகாதிங்க, தோல்வியை மனதில் வைத்திருக்காதீர்கள் என்பதுதான். அதை நானா மிகவும் கஷ்டமான விஷயமாக பார்க்கிறேன். மேலும் இரண்டாவதாக அவருக்கு கால் உடைந்த விஷயம்தான். அந்த உடைந்த காலை வைத்துக்கொண்டே எப்படி ஒரு பிரபலமான நடிகரானார். இந்த விஷயத்தை ஒரு கதையாகத்தான் கேட்கமுடியும் தவிர, அவரின் பெயரை உறிந்து என்னால் அதை உணரமுடியாது. அவர் எனது அப்பா என்பதால் எனக்கு ஒரு எமோஷனல் இணைப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: ’’அந்த நடிகை ஓவர் திறமை.. நான் வேண்டாமென்றேன்’’.. பிரதீப் ரங்கநாதன் புகழ்ந்த நடிகை!

அவரை பற்றி யோசிக்கும்போது நான் மிகவும் எமோஷனல் ஆவேன். அவர் எப்போதுமே முயற்சியை வெளிக்காட்டுவார். நானும் சில கதிஷ்டமான விஷயங்களை எதிர்கொள்ளும்போதும், படப்பிடிப்பின்போது, உடலளவு கடுமையான விஷயங்களை எதிர்கொள்ளும்போதும் எனது அப்பாவைதான் மைண்டில் வைத்திருப்பேன். மேலும் எனது தந்தையின் போராட்டங்களும் சவால்களும், எனது வாழ்க்கையை வடிவமைக்கவும், இதுவரை நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் வடிவமைக்கவும் உதவியாக இருந்ததாக” துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.

பைசன் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து மாரிசெல்வராஜ் வெளியிட்ட பதிவு :

இந்த பைசன் படமானது கபடி மற்றும் காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படம் வெளியாகி இன்னும், 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 அக்டோபர் 13ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்துள்ளது.