Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’’அந்த நடிகை ஓவர் திறமை.. நான் வேண்டாமென்றேன்’’.. பிரதீப் ரங்கநாதன் புகழ்ந்த நடிகை!!

Pradeep Ranganathan About Mamitha Baiju: சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் டியூட் வெளியாகி காத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூவை பாராட்டி பேசியுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.

’’அந்த நடிகை ஓவர் திறமை.. நான் வேண்டாமென்றேன்’’..   பிரதீப் ரங்கநாதன் புகழ்ந்த நடிகை!!
மமிதா பைஜு மற்றும் பிரதீப் ரங்கநாதன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2025 16:49 PM IST

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் மொழியில் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருக்கும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி காத்திருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருக்கிறார். இவருக்கு தமிழில் பிரம்மாண்ட திரைப்படமாக இந்த டியூட் படம் அமைந்துள்ளது.

இப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூவை பாராட்டிப் பேசியுள்ளார். மேலும் டியூட் படத்திற்கு முன் அவருடன் நடிக்கவிருந்த படம் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம் – வைரலாகும் வீடியோ

டியூட் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

மமிதா பைஜூ குறித்து நெகிழ்ச்சியாக பேசிய பிரதீப் ரங்கநாதன் :

அந்த நேர்காணலில் பேசிய பிரதீப் ரங்கநாதன், டியூட் படம் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய அவர் நடிகை மமிதா பைஜூவை புகழ்ந்துள்ளார். அதில் பிரதீப் ரங்கநாதன், “மமிதா பைஜூ மிகவும் திறமையான நடிகை. அவர் மிகவும் நன்றாக படங்களில் நடிக்கிறார் என நான் நினைக்கிறேன். நான் இந்த டியூட் படத்தில் நடிக்கும்போது, அவர் எனக்கும் இணையாக நடித்திருந்தார். அவரின் நடிப்பை கண்டு நான் வியந்தேன். இந்த படத்தில் முதலில் மமிதா பைஜூவை நடிக்கவைக்க வேண்டும் என இயக்குனர் சொன்னதும் முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

இதையும் படிங்க: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள் – நடிகை பிரியங்கா மோகன் காட்டம்!

அதன் பிறகுதான் இயக்குநர் சொன்னார், மமிதாவிடம் கவிதையை கூறிவிட்டதாகவும் அவருக்கும் பிடித்திருப்பதாகவும் என கூறினார். ஏனென்றால் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் இருக்கிறது. நான் இந்த படத்திற்கு முன்னே மமிதா பைஜுவுடன் படம் நடிப்பதாகத்தான் இருந்தது. லவ் டுடே திரைஇப்படத்திற்காக மமிதா பைஜுவைதான் நடிக்கவைக்க நினைத்திருந்தேன்.

அப்போது அவர் சூர்யா சாரின் வணங்கான் படத்தில் நடித்துகொண்டியிருந்தார். அப்போது அவருக்கு போதிய நேரம் இல்லாததால் லவ் டுடே படத்தில் நடிக்கவில்லை. பிறகுதான் இவனா இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த டியூட் படத்தில் மமிதா பைஜூவின் இதுவரை பார்க்கப்படாத எமோஷனல் காட்சிகள் இருக்கும்” என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.