சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம் – வைரலாகும் வீடியோ
Actor Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சமீபத்தில் நடிகர் துருவ் விக்ரம் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம் (Actor Dhruv Vikram). அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் தொடர்ந்து நடிகர்களும், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என அனைவரும் தங்களது வாரிசுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விக்ரமின் மகனாக கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம். தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் துருவ் விக்ரம். முதலில் இந்தப் படத்தை இயக்குநர் பாலா தான் வர்மா என்ற பெயரில் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் விக்ரமிற்கு பெரிய அளவில் திருப்தி இல்லாத காரணத்தால் அந்தப் படத்தை வெளியிடாமல் மீண்டும் வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்து வெளியிட்டனர். இந்தப் படம் ரீமேக் படம் என்பதால் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் உடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். இதில் நடிகர் விக்ரம் தான் நாயகன் அவருடன் இணைந்தே நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தார். இதுகுறித்து சமீபத்தில் நடிகர் துருவ் விக்ரம் பேசியது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது.




சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம்:
வர்மா மற்றும் ஆதித்ய வர்மா ஒரு ரீமேக் செய்யப்பட்ட படம். அதே போல மகான் நிச்சயமாக சியான் விக்ரமின் படம். அதன்படி தற்போது நான் நடித்துள்ள பைசன் தான் முதன்முதலில் நான் மட்டும் நாயகனாக நடித்த படம். அதன்படி நான் பைசன் எனது முதல் படம் என்று சொன்னதற்கு காரணம் இதுதான் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் துருவ் விக்ரமின் பேச்சு:
#DhruvVikram clarifies the controversy:
“#Varma/#AdhiyaVarma was remake & has reference✌️. #Mahaan was ofcourse #ChiyaanVikram film😀. #Bison was the independent film i did first time💪. Yes i should have interpreted like this, but this is what I mean🤝” pic.twitter.com/LI8TwSeCWd
— AmuthaBharathi (@CinemaWithAB) October 11, 2025