சினிமாவில் 4 ஆண்டுகளைக் கடந்தது டாக்டர் படம்… கொண்டாடும் படக்குழு!
4 Years Of Doctor Movie : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றப் படம் டாக்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் கடந்த 09-ம் தேதி அக்டோபர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டாக்டர். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் குறிப்பாக வசூலில் ரூபாய் 100 கோடிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தான் இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் வினய் ராய், அர்ச்சனா சந்தோக், தீபா சங்கர், மிலிந்த் சோமன், யோகி பாபு, அருண் அலெக்சாண்டர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ரகு ராம், ராஜீவ் லக்ஷ்மன், பிக்ரம்ஜீத் கன்வர்பால், ஜாரா வினீத், கராத்தே கார்த்தி, ஸ்ரீஜா ரவி, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த், ஜார்ன் சுர்ராவ், ஹர்ஷத், பிள்ளையார் ருத்ரு, ஆத்மா பேட்ரிக், பிரியதர்ஷினி ராஜ்குமார், கௌரி சங்கர் கிருஷ்ண மூர்த்தி, ஜி.மாரிமுத்து, ஷாஜி சென் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் கதை என்ன?
ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் பஞ்சுவலாகவும் நேரடியாக பேசக்கூடிய நபராகவும் இருக்கிறார். ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகை பிரியங்கா மோகனைப் பார்த்த இவருக்கு பிடித்துப்போக திருமணத்திற்காக பேசுகிறார்கள்.
முதலில் திருமணத்திற்கு சம்மதிக்கும் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு சரியாக பேசத் தெரியவில்லை. ரொமான்ஸ் கூட வரவில்லை என்று அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் இடைப்பட்ட காலத்தில் பிரியங்காவின் அண்ணன் மகளுடன் நெருக்கமாகிறார். அந்த சிறுமி மீது அவருக்கு பாசம் அதிகரித்தது.
இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற பிரியங்காவின் அண்ணன் மகளை யாரோ கடத்திவிடுகின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற சிவகார்த்திகேயன் பல முயற்சிகளை எடுக்கிறார். இறுதியில் கடத்தல் கும்பலிடம் இருந்து அந்த சிறுமியை சிவகார்த்திகேயன் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Also Read… ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் ஆக்ஷன் மூவி ராவணபிரபு – ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
டாக்டர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
4 years of #Doctor ❤️
Thank you for making this film a special one, then and always.#4YearsOfDoctor#4YearsOfMegaBBDoctor@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Nelsondilpkumar | @anirudhofficial | @kjr_studios | @priyankaamohan | @vijaykartikdop | @Nirmalcuts | #Vinay |… pic.twitter.com/48N1OldOIG— Sivakarthikeyan Productions (@SKProdOffl) October 9, 2025