Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கவின் – நயன்தாராவின் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

Hi Movie First Look Poster: நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஹாய். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கவின் – நயன்தாராவின் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2025 18:20 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக ரசிகர்களிடையே வலம் வருகிறார் நடிகர் கவின் (Actor Kavin). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கிஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஸ் இயக்கி உள்ளார். மேலும் இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மக்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கவின் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகை ஆண்ட்ரியா உடன் இணைந்து மாஸ்க் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து ஹாய் என்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கவினின் மாஸ்க் படத்தில் இருந்து சமீபத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அறிவிப்புகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் நடிகர் கவின் நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடித்த ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளியானது கவின் – நயன்தாராவின் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

கடந்த 2024-ம் ஆண்டு நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் ஹாய் படம் உருவாக உள்ளது குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பிற்கு பிறகு அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவான் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… சுற்றுச்சூழல் விவகாரம்… பிக் பாஸ் ஸ்டுடியோவை மூட அரசு அதிரடி உத்தரவு

ஹாய் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்… கஸ்தூரி ராஜா சொன்ன விசயம்